Viral Video: சிங்க நடைங்கிறது இது தானா... மெயின் ரொட்டில் வாக்கிங் போகும் சிங்கம்... பீதியில் மக்கள்!

சாலையில் போக்குவரத்தின் ஊடே, சிங்கம் ஒன்று சிங்கிளாய் வாக்கிங் போகும் காட்சி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2023, 03:31 PM IST
  • 'காட்டின் ராஜா' குஜராத் மாநிலத்தின் மேம்பாலத்தில் உலா.
  • சிங்கம் ஒன்று சாலையோரம் காரும் பைக்கும் கடந்து செல்வதைக் காணலாம்.
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியோ.
Viral Video: சிங்க நடைங்கிறது இது தானா... மெயின் ரொட்டில் வாக்கிங் போகும் சிங்கம்... பீதியில் மக்கள்! title=

சாலையில் நீங்கள் வாகனத்தில் போய் கொண்டிருக்கும் போது, கார் கண்ணாடி வழியாக எட்டிப்பார்க்கும் போது சிங்கம் உங்களை நோக்கி கைகாட்டினால் என்ன செய்வீர்கள்? இது நிச்சயமாக வயிற்றி கலக்கி பீதியை உண்டாக்கும்  தருணமாக இருக்கும். சமீபத்தில் குஜராத்தில் வாகனப் போக்குவரத்துக்கு மத்தியில் சிங்கம் ஒன்று தெருக்களில் நடந்து சென்றது போன்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. 'காட்டின் ராஜா' மாநிலத்தின் மேம்பாலத்தில் உலா செல்வதை உள்ளூர்வாசிகள் காண்கிறார்கள். இந்த காட்சிகள் மாநிலத்தை தாக்கிய மழை வானிலைக்கு மத்தியில் பல நெட்டிசன்களால் ஆன்லைனில் பகிரப்பட்டது.

அந்த வீடியோவில், சிங்கம் ஒன்று சாலையோரம், ஹாயாயாக நடந்து செல்லும் போது, காரும் பைக்கும் கடந்து செல்வதைக் காணலாம். அமைதியான சிங்கம் சுற்றியுள்ள மக்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், பரபரப்பான சாலையில் சிங்கம் ஒன்று சாதாரணமாக நடப்பதைக் கண்டு மக்கள் பீதியில் உறைந்தனர்.

சிங்கம் ஒன்று சாலையில் நடந்து செல்லும் வீடியோ

13 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, கனமழையால் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக செய்தி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. "குஜராத் சிங்கம் வெள்ளத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது & பொதுமக்கள் நிறைந்த நெடுஞ்சாலையில் நடந்து சென்றது" என்று ஒரு ட்விட்டர் பயனர் வீடியோவை ஆன்லைனில் பதிவிடும் போது எழுதியுள்ளார். மற்றொருவர் அந்த வீடியோ குஜராத்தின் ஜூனாகத் பகுதியில் இருந்து வந்ததாகக் கூறி, "மழை நின்ற பிறகு காட்டின் ராஜா வாக்கிங் சென்றார்" என்று எழுதினார்.

ஜூனாகத் வெள்ளம்

குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஆங்காங்கே நீர் தேங்கியதால், இயல்[உ வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாரத்தின் முற்பகுதியில் பெய்த கனமழையில் மூன்று உயிர்கள் பலியாகின. சுரேந்திரநகர் மாவட்டத்தில் இருவர் மற்றும் ராஜ்கோட் மாவட்டத்தில் ஒருவர் மரண்டமைடைந்தார்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் இதே போன்று வித்தியாசமான சிங்கம் வீடியோ ஒன்று வைரலாகியது. காட்டின் ராஜாவான சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீர்கள். ஆனால், இலை தளைகளை சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா... ஆமாம்... உண்மை தான்... வைரலாகிய சிங்கம் வீடியோவில், சிங்கம் ஒன்று மரத்தின் இலை தழைகளை பொறுமையாக சாப்பிடுவதைக் காணலாம் .

காட்டு விலங்குகளே அஞ்சும் சிங்கம் இலைகளை உண்ணும் வீடியோ:

 

 

சிங்கத்தின் இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அவர் அந்த பதிவில், சிங்கத்தின் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது, அது மூலிகைகளை தேடி சாப்பிடக் கூடும் என்றும், தண்ணீர் சத்து குறைந்து தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் போதும் அது இவ்வாறு சாப்பிடக் கூடும் என்றும் தெரிவிக்கிறார்.  

மேலும் படிக்க | Viral Video: மிரட்டிய பெண் சிங்கம்.. அடங்கிப் போன ஆண் சிங்கம்!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News