மரத்தில் இருந்து ஜெட் வேகத்தில் கீழே குதித்து மான் வேட்டை நடத்திய சிறுத்தை புலி - வைரல் வீடியோ

Viral video: மரம் ஒன்றின் மேல் இருந்த சிறுத்தைப் புலி சரியான நேரம் பார்த்து ஜெட் வேகத்தில் கீழே குதித்து மானை வேட்டையாடும் வீடியோ காண்போரை வியக்க வைக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2023, 12:44 PM IST
மரத்தில் இருந்து ஜெட் வேகத்தில் கீழே குதித்து மான் வேட்டை நடத்திய சிறுத்தை புலி - வைரல் வீடியோ title=

சிறுத்தை புலியின் வேட்டையை பலமுறை பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் அது வேட்டையாட வைத்திருக்கும் தந்திரம் சிலிர்க்க வைக்கும். இரையை பிடிக்க அனைத்து அஸ்திரங்களையும் துல்லியமாக பயன்படுத்தும் விலங்குகளில் இதுவும் ஒன்று. கீழே வேட்டை இலக்கு இருந்தால் பதுங்கியும், நீருக்குள் இருந்தால் நீந்தியும் வேட்டையாடும். தப்பிக்க நினைத்து மரத்தின் மீது விலங்குகள் ஏதும் ஏறினால், அதற்கு இன்னும் சௌகரியம். ஏனென்றால் சிறுத்தை புலி மரமும் ஏறும். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அதன் உச்சியில் இருந்து கீழே குதித்தும் வேட்டையாடும். அதனால், சிறுத்தை புலியின் கண்ணில் பட்டால் சிம்பிளாக சொல்வதென்றால் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது. 

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் காதல் ஜோடி செய்த அதிர்ச்சி செயல்: வீடியோ வைரல்

அப்படியான வீடியோ ஒன்று தான் இப்போது டிவிட்டரில் வைரலாகியிருக்கிறது. மரத்தின் மீது இருக்கும் சிறுத்தை புலி கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து மானை வேட்டையாடுகிறது. இந்த காட்சி காண்போரை வியக்கவும் வைக்கிறது. இந்த வீடியோ Big cats india என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் குழுவாக மான் கூட்டம் ஒன்று மரத்தின் நிழலில் இரை எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்போது, அவைகளுக்கு தெரியாது தங்களை வேட்டையாடும் காலன் சிறுத்தைப் புலி அந்த மரத்தின் மீது தான் இருக்கிறது என்று. வழக்கம்போல் வயிறு நிரம்ப மான்கள் உணவை எடுத்துக் கொண்டிருக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்தின் மீது இருந்து சிறுத்தை புலி கீழே குதித்து மான் ஒன்றின் கழுத்தை சரியாக பிடித்துவிடுகிறது.

அந்த நொடியில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த மற்ற மான்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிதறியடித்து ஓடுகின்றன. ஆனால், சிறுத்தை புலி அந்த மான் கூட்டத்தில் இருந்த ஒரு மானை வேட்டையாடிவிடுகிறது. இந்த வீடியோ காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. ஏனென்றால் எவ்வளவு உயரமான அந்த மரத்தில் இருந்து லாவகமாக அந்த சிறுத்தைப் புலி கீழே குதித்து மானை வேட்டையாடி இருக்கிறது. இவையெல்லாம் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று தான் பல நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: கதையல்ல நிஜம்... பாட்டிலில் கல்லை போட்டு தாகத்தை தீர்த்துக் கொண்ட காகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News