’தானாகவே நடக்கும் ஏணி' இணையத்தில் பரவும் விநோதமான வைரல் வீடியோ

ஏணி ஒன்று மனிதனை போல் நடக்கம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 'நடக்கும் ஏணி'யின் இந்த காட்சிகள் பல்வேறு ஊகங்களையும் பரவலான அச்சத்தையும் தூண்டியுள்ளது, பலர் இந்த நிகழ்வை பேய்கள் என்று கூறி வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 3, 2023, 02:54 PM IST
  • ஏணி தானாகவே நகரும் வைரல் வீடியோ.
  • இந்த வீடியோவின் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
  • நிர்வாகத்தினர் முழு விசாரணை நடத்தினர்.
’தானாகவே நடக்கும் ஏணி' இணையத்தில் பரவும் விநோதமான வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களின் தற்போதைய காலகட்டத்தில், எது வேண்டுமானாலும் வைரலாகும்.  தற்போது ஏணிகளின் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இதில் அந்த ஏணி எந்த உதவியும் இல்லாமல் முன்னேறி நடந்து செல்வதைக் காணலாம். மக்கள் இந்த நிகழ்வை பேய் என்று கூறி வருகின்றனர். இருப்பினும், அதன் உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியவில்லை.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, இது பரேலியில் உள்ள எஸ்ஆர்எம்எஸ் மருத்துவக் கல்லூரியின் பிரேத பரிசோதனை அறையில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அங்கே ஏணி தானாகவே நகர ஆரம்பித்தது. மேலும் இந்த வீடியோவை அங்கிருந்த ஒரு நபர் தான் வீடியோவாக எடுத்திருக்கிறார். அத்துடன் இந்த நிகழகவை பேய்களுடன் இணைத்து பேசி வந்தனர்.

மேலும் படிக்க | மான்களின் பசி போக்க குரங்கு செஞ்ச வேலை: இணையவாசிகளை நெகிழ வைத்த வைரல் வீடியோ

இருப்பினும், இரண்டு நாட்களில் இந்த வீடியோவின் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வீடியோ பரேலியில் எடுக்கப்படவில்லை என்றும், இந்த வீடியோ உத்தரகாண்டில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இது அங்குள்ள அல்மோரா அடிப்படை மருத்துவமனையில் படமாக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்குள்ள நிர்வாகத்தினர் முழு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த வீடியோ போலியான முறையில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கும் மருத்துவமனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியது. அதுமட்டுமின்றி இன்றி இந்த விவகாரத்தில் ஆக்சிஜன் ஆலை ஊழியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இனிவரும் காலங்களில் மருத்துவமனை அல்லது மருத்துவமனை வளாகத்தில் இதுபோன்ற வீடியோக்களை யாராவது எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் அமித் சிங் கூறினார். அத்துடன் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர் சிசிடிவியில் வீடியோ எடுப்பதை பார்த்ததாகவும், அதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சக்கர நாற்காலியை நகர்த்துவதையும் வீடியோவாக எடுத்தார்
சக்கர நாற்காலியை ஏணி மூலம் தன்னந்தனியாக நகர்த்துவதையும் அந்த ஊழியர் வீடியோ எடுத்துள்ளார். அதுவும் வைரலானது. அல்மோரா சந்தையில் இதைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்தன. பலர் மருத்துவமனைக்கு செல்ல பயந்தனர், ஆனால் இப்போது விஷயம் தெளிவானதை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த வைரல் வீடியோ ட்விட்டரி ஷேர் செய்யப்பட்டது. மேலும் தற்போது வரை இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ பகிரப்பட்டு தற்போது வரை 6.88 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 7,400 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது. இந்த திகிலூட்டும் வீடியோவுக்கு மக்கள் தங்களின் கருத்துகலையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | வைரலாகும் திருட்டு வீடியோ! ஆக்டோபஸின் அற்புதமான திருட்டு? திருடு போனது என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News