'அய்யோ...' நாய் குட்டிகள் முன் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு... விடாமல் கத்திய தாய் நாய்!

Cobra Viral Video : குட்டி நாய்களுக்கு பால் கொடுக்க வந்த தாய் நாயை தடுத்து, குட்டிகளுக்கு முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.     

Written by - Sudharsan G | Last Updated : Dec 12, 2022, 08:10 PM IST
  • இந்த சம்பவம் கடலூரில் நேற்று நடந்துள்ளது.
  • பாம்பு பிடி வீரர் அந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.
'அய்யோ...' நாய் குட்டிகள் முன் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு... விடாமல் கத்திய தாய் நாய்! title=

Cobra Viral Video : சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விலங்குகள் செய்யும் சேட்டை, விலங்குகள் மோதிக்கொள்ளும் வீடியோ உள்ளிட்டவை வைரலான நிலையில், தற்போது வித்தியாசமான வகையில் விலங்குகளின் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியாகியுள்ளது. 

மேலும் படிக்க | அடேய் என்னடா இது....ஸ்டைலா, கெத்தா தம் அடிக்கும் நண்டு: வீடியோ வைரல்

 

கடலூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்க்கரை. இவர் வளர்த்த நாய் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில், நேற்று (டிச. 11) தான் ஈன்ற குட்டிகளுக்கு பால் கொடுக்க தாய் நாய் வந்துள்ளது. அப்போது, மூன்று நாய் குட்டிகளையும் நல்ல பாம்பு ஒன்று சூழ்ந்துகொண்டு, தாய் நாயை பால் கொடுக்க விடாமல் படம் எடுத்து தடுத்தது.

தாய் பாசத்தில் குரைத்த நாயின் சத்தம் கேட்டு வந்து பார்த்த வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அவர் வரும் வரையிலும் நல்ல பாம்பு குட்டி நாய்களை தீண்டாமல் இருந்ததை செல்லா வீடியோ எடுத்தார்.

தொடர்ந்து குட்டிகள் முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை செல்லா லாபகரமாக மீட்டார். குட்டி நாய்களை காத்த நல்ல பாம்பு என இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும் படிக்க | நபரின் முகத்தில் ஊர்ந்து ஆபத்தான பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News