Viral Video: காயின் மேஜிக்கில் அசத்தும் கில்லாடி பூனைக்குட்டி... வியக்கும் நெட்டிசன்கள்!

Viral Video of Cute Kitten: தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர், தனது பூனைக்குட்டியுடன் மிக ஆர்வமாக விளையாடுவதைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 4, 2023, 09:10 PM IST
  • செல்ல பூனைக்குட்டியுடன் ஒரு நபர் விளையாடுவதைக் காணலாம்.
  • செல்லப் பிராணிகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை.
  • பூனைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை.
Viral Video: காயின் மேஜிக்கில் அசத்தும் கில்லாடி பூனைக்குட்டி... வியக்கும் நெட்டிசன்கள்! title=

விலங்குகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. வீட்டில் வளர்க்கும்போது அவை வீட்டில் ஒரு உறுப்பினராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும் படி இருப்பவை. விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள், பூனைகள் குறித்து குறிப்பிடுகையில், அவை மனிதர்களை உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப நடப்பதிலும், சொல்லிக் கொடுப்பதை புரிந்து கொள்வதில் வல்லவை என்கின்றனர். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன.  மேலும், நாம் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் பெரும்பாலான நாய் இனங்களுடன் ஒப்பிடும் போது அவை அளவில் சிறியவை தான். எனவே அவை மிகவும்  தனது உரிமையளருடன் நன்றாக விளையாடுகின்றன.

தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர், தனது பூனைக்குட்டியுடன் மிக ஆர்வமாக விளையாடுவதைக் காணலாம். அவர் பூனையுடன் காயின் மேஜிக்கை செய்து விளையாடுகிறார். தனது உள்ளங்கையை திருப்பி வைத்துக் கொண்டு ஒரு நாணயத்தை அதன் மீது வைக்கிறார். பின்னர், காசைப் புரட்டி மூடி, காசைக் காட்ட உள்ளங்கையைத் தூக்குகிறார். பின்னர் அவர் நாணயத்தை பூனைக்குட்டியின் பாதத்தின் மேல் வைக்கிறார், அது சொல்லிக் கொடுத்ததை போலவே காயினை டாஸ் செய்து, அதன் சிறிய பாதத்தால் அதை மூடுகிறது. பின்னர் அது நாணயத்தை காட்ட காலைத்  தூக்குகிறது. க்யூட்டாஅன் இந்த வீடியோ பலரை கவர்ந்துள்ளது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 

 

வைரலாகும் இந்த வீடியோ, செல்லப்பிராணிகளுக்கும்  அதன் உரிமையாளருக்கும் இடையே ஆன நெருக்கத்தையும் பாசத்தையும் எடுத்துக் காட்டுகிறது என்றால் மிகையில்லை. சிலருக்கு, இது ஒரு வழக்கமான செயலாகத் தோன்றலாம். ஆனால் விலங்குகளின் நடத்தை மற்றும் செல்லப்பிராணி வளர்ப்பில் உள்ளவர்கள் நிச்சயமாக இங்கே, வெளிப்படும் பெற்றோர்-குழந்தை உறவை அனுபவித்து ரசிப்பார்கள். மேலும் இது மேலும் இந்த வீடியோ அனைவரின் அன்றாட டென்ஷனை குறைத்து மனதிற்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் ஏதும் இல்லை. 

இதே போன்று, மனதிற்கு சந்தோஷம் தரும் ஒரு வீடியோவாக, சில நாட்களுக்கு முன், ஆண் மயில் ஒன்று, தனது காதலியை மயக்க அழகாக ஆடும் வீடியோ மிகவும் வைரலாகியது. வீடியோவில் காணபடும் மயில், தனது காதலியை ஈர்க்க, அழகிய நடனம் ஆடி அசத்துகிறது. ஆனால், ஏனோ, அந்த பெண் மயிலில் மனம் இரங்கவேயில்லை. அது காதல் கொள்ளும் மன நிலையில் இல்லை போலிருக்கிறது. இந்த வைரல் வீடியோ (Viral Video), Figen @TheFigen_ என்ற கணக்கில், X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதனை மறு பதிவிட்டு வருவதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனை கீழே உள்ள இணைப்பில் கண்டு ரசிக்கலாம்.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News