நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

Terrifying Snakes Video: ஒரு பாம்பைப் பார்த்தாலே பயத்தில் ஜன்னி வந்துவிடும் என்றால், மூட்டை முழுக்க பாம்புகளை பின்னிக் கிடப்பதைப் பார்த்தால் என்ன ஆகும்?    

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2023, 09:48 AM IST
  • மூட்டை மூட்டையாய் பாம்பு வீட்டிற்குள் வந்தால் என்ன ஆகும்?
  • பாம்பு மூட்டையை அவிழ்த்துவிடும் மனிதர்
  • பாம்புகளின் வீடியோ வைரல்
நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணையமும், தொழில்நுட்பங்களும் நமது வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன. மனிதர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துவிட்ட சமூக உடகங்கள் நமக்கு பலவிதமான அனுபவங்களை வழங்குகின்றன. சமூக ஊடகங்களில், நன்மையையும், தீமையையும் ஒன்றாகவே கலந்து இருந்தாலும், அதில் ரசிப்பதற்கான விஷயங்கள் அதிகம் இருப்பதை மறுத்துவிட முடியாது. இந்த இணைய வசதியும் தொழில்நுட்பத்தின் உதவியால் வாழ்க்கையை சுலபமாக்குகின்றன.

இணையத்தில் வினோதமான விஷயங்களை பற்றி மட்டுமா தெரிந்துகொள்கிறோம்? தேவையில்லாத செய்திகள் முதல், அத்தியாவசியமான செய்திகள் வரை அனைத்தையும் இணைய உலகம் வாரி வழங்குகிறது. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. 

மேலும் படிக்க | WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல்

அதிலும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக பாம்புகளின் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர்.

பாம்பு வீடியோக்களில் எதைப் போட்டாலும், அது வைரலாகிவிடும் என்றாலும், இன்று மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்றைப் பார்க்கலாம். இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த வைரல் வீடியோவில், ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான பாம்புகள் பின்னிப்பிணைந்து இருப்பதைப் பார்த்தாலே வயிற்றைப் பிரட்டுகிறது.  

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

நெல்லிக்காய் மூட்டையா ?  பாம்பு மூட்டை 
தற்போது  வெளியான வீடியோவில், ஒருவர் தன் கையில் இருக்கும் மூட்டையை தலைகீழாக கொட்டுகிறார். அதில் இருந்து பின்னிப் பிணைந்து இருக்கும் பாம்புகள் அப்படியே கொட்டுகின்றன.

மூட்டையைக் கொட்டினால் நொடியில் சிதறியோடும் நெல்லிக்காய் மூட்டையா இது? சில நொடிகளில் அந்த தரை முழுவதும் பாம்புகளால் நிறைந்துவிடுகிறது. பாம்பு மூட்டை அவிழ்த்து விட்ட அந்த மனிதர், குப்பலாய் கிடக்கும் பாம்புகளை தனியாக பிரித்து விடுகிறார்.

சில நொடிகள் கொண்ட வீடியோவை ஒரு முறை பார்த்தால் அத்துடன் அதை நிறுத்த முடியாமல், தொடர்ந்து பல முறை பார்க்கத் தூண்டும் சங்கடமான வீடியோ இது.  இந்த வீடியோ, snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் லைக் போட்டு, ஷேர் செய்துள்ளனர். இப்படியொரு வீடியோவை பார்ப்பது சுலபமான காரியம் அல்ல...

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News