Viral Video: முதலையுடன் உப்பு மூட்டை விளையாடும் சிறுவன்... ரொம்ப தைரியம் தம்பி!

Crocodile Viral Video: முதலைகளை பார்த்தாலோ அல்லது முதலைகள் என்ற பெயரை கேட்டாலோ  பலரும் பயந்து நடுங்கும்போது, ஒரு சிறுவன் முதலையிடம் செய்யும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 20, 2023, 07:34 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Viral Video: முதலையுடன் உப்பு மூட்டை விளையாடும் சிறுவன்... ரொம்ப தைரியம் தம்பி! title=

Crocodile Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்களை மக்கள் எப்போதும் விரும்பி பார்க்கிறார்கள். இதற்கு இவற்றில் காணப்படும் விலங்குகளின் வித்தியாசமான பாணியே காரணமாகும். 

சிறுவனின் செயல்

இது ஒருபுறமிருக்க, மைதானத்தில் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, பட்டம் பறக்கவிடுவது, விலங்குகளுடன் விளையாடுவது, என வேடிக்கைக்காக பல செயல்களை குழந்தைகள் செய்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சிறுவன் ஒரு சிறு முதலையை தன் முதுகில் சுமந்து கொண்டு எந்த பயமும் கவலையும் இல்லாமல் போகிறான்.

மேலும் படிக்க | Viral Video: கொக்கை பதம் பார்க்கும் பாம்பு.... உயிர் பிழைக்க போராடும் கொக்கு!

வைரல் வீடியோ: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 

 (@bilal.ahm4d)

இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியும் மிகவும் அலட்சியமாக இருக்கிறார். முதலைகள் தண்ணீருக்குள் ஒளிந்துகொண்டு தங்கள் இரையை அதீத வேகத்தில் தாக்கும். இதனால், அது மீதான பயத்தினாலோ அல்லது முதலை இருக்கும் குளத்தின் அருகே கூட பலரும் செல்ல விரும்ப மாட்டார்கள். 

முதலையுடன் நட்பு

ஆனால், இந்தச் சிறுவன் முதலையைத் தன் முதுகில் சுமந்திருப்பதற்குக் காரணம், மிகச் சிறிய வயதில் இருந்தே முதலைகளுடன் நட்பாக பழகி வந்துள்ளான். அதன் அன்பின் வெளிப்பட்டில்தான், சிறுவன் அந்த முதலையை முதுகில் சுமந்து சென்றுள்ளான். 

முதலையின் நடத்தை மற்றும் மனநிலையை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது அந்த சிறுவனுக்கு நன்றாக தெரிந்துள்ளது. இந்த வீடியோ படமாக்கப்பட்ட இடத்தில் வசிப்பவர்கள் இந்த உயிரினங்களுடன் நன்றாக பழகியிருக்கலாம்.இந்த வீடியோ ஆயிரக்கணக்கான கருத்துகளை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா? எட்டி உதைத்த குரங்கால் இன்னொரு குரங்குக்கு நேர்ந்த கதி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News