நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. வடமாநிலங்களில் வெப்ப அலைகளே வீச தொடங்கியிருக்கின்றன. கட்டுகடங்காமல் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கும் வெப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியிருக்கியுள்ளது. வெயிலில் வேலை செய்யும் மக்கள், உடல் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்தந்த மாநில அரசுகளும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், கொளுத்துகிற வெயிலில் அடுப்பு இல்லாமல் சூரிய ஒளியிலேயே ஒருவர் ஆம்லெட் சமைத்திருக்கும் வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | ஆட்டை முழுசா விழுங்கி அவதிப்பட்ட மலைப்பாம்பு..அப்புறம் என்னாச்சி: வைரல் வீடியோ
Puchu Babu என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில் தோசை கல்லுடன் மொட்டை மாடிக்கு செல்கிறார். அங்கு வெயில் கடுமையாக காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தன் கையில் இருக்கும் தோசைக் கல்லில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றுகிறார். வெயிலின் கடுமையில் தோசைக் கல்லில் உற்றிய முட்டை சிறிது நேரத்தில் ஆம்லெட்டாகிறது. அந்தளவுக்கு வெயிலின் கடுமை இருக்கிறது. பின்னர் அந்த ஆம்லெட்டை எடுத்து அவர் சாப்பிடுகிறார். இந்த வீடியோ இப்போது 2.2 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவுக்கு லைக் கொடுத்துள்ளனர்.
கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள் இப்படியே வெளியில் அடித்தால் அதிலேயே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். கேஸ் சிலிண்டருக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், இலவச கேஸ் அடுப்பு என்று சொன்னாலும், மாதம் ஒரு முறை சிலிண்டருக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், இப்படி வெயில் அடித்தால் அந்தப் பிரச்சனை இருக்காது. கொளுத்தும் வெயிலில் சமைத்து சாப்பிட்டு பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம், உங்கள் ஐடியா சூப்பர் நண்பரே என கிண்டலாக கூறியுள்ளனர். பலர் வெயிலின் தாக்கம் குறித்த சமூக அக்கறையையும், சூழலியலின் ஆபத்தையும் இந்த வீடியோ உணர்த்துவதாக பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | யம்மாடி..இப்படி ஒரு சண்டையா, முரட்டு காளைகளின் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ