நாம் தண்ணீர் குடிக்கும்போது கைகளை பயன்படுத்தி குடிப்போம், சில உயிரினங்கள் நாக்கால் நக்கி குடிக்கும், சில உயிரின வகைகள் உறிஞ்சி குடிக்கும். நம் எல்லாருக்கோமே யானை எப்படி தண்ணீர் குடிக்கும் சாப்பிடும் என்பது தெரிந்த ஒன்று, யானை எப்போதும் அதன் நீண்ட தும்பிக்கையை பயன்படுத்தி தான் நீரை குடிக்கவோ அல்லது சாப்பிடவோ செய்யும். தனது தும்பிக்கையை பயன்படுத்தி தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்பதை முதல் தடவையாக ஒரு யானைக்குட்டி கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைகளை பார்க்கும்பொழுது பயமாக இருந்தாலும், யானைக்குட்டிகள் செய்யும் குறும்புகளில் நம்மை வியக்கவைப்பதோடு ரசிக்கவும் வைக்கின்றன. குட்டி யானையின் இந்த அழகிய வீடியோவானது உலக யானைகள் தினத்தன்று பிரத்யேகமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
யானையின் செயல் பார்ப்பதற்கு அழகாக, மீண்டும் மீண்டும் இந்த காட்சியை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த வீடியோ அமைந்திருக்கிறது. இந்த வீடியோவானது கடந்த ஆகஸ்ட்-12ம் தேதியன்று ட்விட்டரில் ராபர்ட் இ ஃபுல்லர் என்பவரது கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க யானை கூட்டங்கள் வந்திருக்கிறது, அப்போது தாய் யானை ஒன்று தனது தும்பிக்கையால் தண்ணீரை குடித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் பக்கத்தில் இருக்கும் குட்டி யானைக்கோ இதுவரை தும்பிக்கையை ஒழுங்காக பயன்படுத்தி பழக்கமில்லை. அதனால் எப்படி குடிக்க வேண்டும் என்பதறியாது வேகமாக தனது தும்பிக்கையால் நீரை அள்ளி அள்ளி வீசுகிறது.
Just a baby elephan learning how to use its trunk#worldelephantday pic.twitter.com/knD6PuaheF
—(@RobertEFuller) August 12, 2022
இப்போதுதான் அந்த குட்டியானை தண்ணீரை குடிக்க கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறது என்பது இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து தெரிகிறது. இந்த அழகான வீடியோவை இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான இணையவாசிகள் கண்டு மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், பல கமெண்டுகளும் அடுக்கடுக்காக குவிந்துகொண்டே வருகின்றது.
மேலும் படிக்க | பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது: குப்புற விழுந்த குட்டி யானை, வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ