தேர்வின் போது காப்பி அடித்தல் என்று வரும் போது, மாணவர்கள் எல்லாவிதமான வழிகளையும், திறமைகளையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். மேலும், தொழில்நுட்பம் இப்போது அதை மேலும் எளிதாக்கியுள்ளது.
சமீபத்தில், ஹரியானாவில் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் தனது ஆங்கில தேர்வின் போது மோசடி செய்த 10 ஆம் வகுப்பு மாணவர் ஹரியானா பள்ளிக் கல்வி வாரியத்தின் பறக்கும் படையிடம் பிடிபட்டார். இந்த தேர்வு மோசடி சம்பவம் உங்களுக்கு நிச்சயம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை நினைவு படுத்தும்.
அந்த மாணவர் கண்ணாடி கிளிப் போர்டைப் பயன்படுத்தி, அதன் நடுவில் மொபைல் போனை மறைத்து வைத்துக் கொண்டு, வாட்ஸ்அப் உள்ளிட்ட பல செயலிகளை திறந்து காப்பி அடிக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது. அந்த மாணவை போனை பேப்பரில் மறைத்து வைத்திருந்தான்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவரின் வாட்ஸ்அப் அரட்டையில் வெளியிடப்பட்ட பாடப்புத்தகப் பக்கங்களின் 11 படங்களை வீடியோவில் காணலாம். பத்திரிக்கையாளர் தீபேந்தர் தேஸ்வால் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு , ‘பள்ளிக் கல்வி வாரியம் நடத்தும் வாரியத் தேர்வில் ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வில் மோசடி செய்ததற்காக மாணவர் ஒருவரை பறக்கும் படை கண்டறிந்தது.
மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேர்வுத்துறை
வீடியோவை இங்கே காணலாம்:
One of the examinees got a smartphone fitted in the clipboard for cheating in exam at an examination centre in Fatehabad district of #Haryana in the Board examination being conducted by the Board of School Education. The flying squad detected use of unfair means. @thetribunechd pic.twitter.com/aCXejWV1Sa
— Deepender Deswal (@deependerdeswal) April 5, 2022
“மாணவர் கையடக்கத் தொலைபேசியின் கேலரியில் ஆங்கிலப் பாடத்தின் உள்ளடக்கத்தை சேமித்து வைத்துவிட்டு அங்கிருந்து அதை பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்தார். மற்றொரு வழக்கில், பூனா தேர்வு மையத்தில் (பதேஹாபாத்) மற்றொரு 10 ஆம் வகுப்பு மாணவர் மறைத்து வைத்திருந்த மொபைலை பறக்கும் படையினர் மீட்டனர். பிர்தானா தேர்வு மையத்தில் ஒரு பையன் மாணவனின் பேண்ட் மற்றும் ஒரு பெண் மாணவியின் சட்டையில் இருந்து எழுதப்பட்ட பிட்டுகளையும் பறக்கும் படை மீட்டுள்ளது, ” என்று வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை, மாணவனின் மொபைல் போனில் கண்டறிந்ததையடுத்து, சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR