கிங் கோப்ரா அட்டாக் வீடியோ: பாம்பின் பெயரை கேட்டாலே பலருக்கு வியர்க்கும். தவறுதலாக பாம்பு கடித்தால் உயிரையும் இழக்க நேரிடும். ஆனால் கவனமாக இருந்தால் உயிரைக் காப்பாற்றலாம். அனைத்து பாம்புகளிலும் மிகவும் ஆபத்தான விஷபாம்பாக ராஜநாகம் உள்ளது. அதனால் தான் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் எனக் கூறுவது உண்டு. அப்படிப்பட்ட பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தால், அனைவரின் மனதிலும் அச்சம் ஒட்டிக்கொண்டது. ஆனால் வீட்டில் இருந்த சிறுவனின் தைரியத்தாலும் விவேகத்தாலும் ஆபத்தான நாகப்பாம்பிடமிருந்து ஒட்டுமொத்த குடும்பத்தின் உயிரையும் காப்பாற்றியது. வீட்டில் மறைந்திருக்கும் நாகப்பாம்பை எப்படி அகற்றினார்கள் என்பது குறித்து வீடியோவை பார்த்தால், உங்களுக்கு புரியும். இந்த வீடியோ மிர்சா எம்டி ஆரிஃப் (MIRZA MD ARIF) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது.
வைரல் வீடியோவில் சம்பவ இடத்திற்கு வரும் பாம்பை பிடிக்கும் நிபுணர், இந்த சிறுவனை காட்டி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து எங்களை அழைத்து வந்துள்ளார். இவர் வீட்டில் விஷபாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதை பிடிக்க நாங்கள் வந்துள்ளோம். பாம்பை பிடிக்க வீட்டிற்குள் செல்லும் நிபுணர், அங்கு சிதறி கிடக்கும் பொருட்களை பார்த்தது, இப்படி குப்பை போல, சாமான்களை ஒரே இடத்தில் போட்டு வைக்கக் கூடாது. இடத்தை சுத்தமாக வைக்கவேண்டும் என வீட்டின் உரிமையாளர்களிடம் கூறுகிறார். அதன் பிறகு பாம்பை தேடும் பணியில் ஈடுபடுகிறார்.
மேலும் படிக்க: பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ
வீட்டின் படிக்கட்டு கீழ் குப்பையாக குவிந்த கிடக்கும் சாக்கு மூட்டைக்குள் பாம்பு புகுந்துக்கொண்டது. அந்த சாக்கு மூட்டையை இழுந்து வந்து வெளியே போட்டு, அதனை கிழிக்கும் போது, சாக்குமூட்டையின் ஓட்டை வழியாக பாம்பு வெளியேறுகிறது. உடனே அந்த பாம்பை தனது கையால் பிடித்து கொண்டு தெருவில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் கொண்டு வந்து காண்பிக்கிறார். அதன் பின்னர், அந்த பாம்பை நிபுணர் கொண்டு வந்த பையில் போட்டு எடுத்து செல்கிறார். இதற்கு இடையில், அங்கிருக்கும் மக்களிடம் பாம்பு விஷம் வாய்ந்தது. எனவே பாம்பிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் என அறிவுரை வழங்கிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீங்கள் பாருங்கள். பாம்பிடம் கவனமாகவே இருங்கள். ஒருவேளை பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
மேலும் படிக்க: 'ஷ்ஷ்...சைலண்டா எடுத்துட்டு ஓடிடுவோம்’: கில்லாடி குரங்கு செய்த தில்லாலங்கடி வேலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ