பலவிதமான வீடியோக்கள் வைரலாக சமூக ஊடகங்களில் பலரால் பார்க்கப்பட்டாலும், மனிதாபிமானத்தை பிரதிபலிக்கும் சம்பவங்கள் அனைவரையும் நெகிழச் செய்கின்றன.
அதிலும் ஒரு பள்ளி மாணவியின் சிறு உதவி, அவரது வெள்ளை மனதையும், உதவும் பழக்கத்தையும் காட்டுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது (Viral Video). சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மஞ்சள் நிற ஆட்டோவில் கர்ப்பிணி ஒருவர் அமர்ந்துள்ளார். அவள் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சென்றுக் கொண்டிர்ந்த ஆட்டோ பழுதடைந்ததால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
சமூக உடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மஞ்சள் நிற ஆட்டோவில் கர்ப்பிணி பெண் ஒருவர் அமர்ந்திருப்பதை காணலாம். அவள் வலியால் வேதனைப்படும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
ALSO READ | நெடுஞ்சாலையை கடக்கும் ராட்சஸ அனகோண்டா பாம்பு
'கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் அவரது ஆட்டோ பழுதடைந்தது' என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், அந்த பெண் வலியால் அலறி துடிப்பதையும், ஆட்டோ டிரைவரும் செய்வதறியாது திகைப்பதையும் காணலாம்.
சிறுமி கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவுகிறார்
அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி ஆட்டோ டிரைவர் உதவி கேட்க முற்படுகிறார். பல வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் அவ்வழியாகச் செல்கின்றன, ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.
சிறிது நேரத்தில் அந்த வழியாக செல்லும் ஒரு BMW கார் ஆட்டோ டிரைவரின் கையசைவுக்கு நிற்கிறது. முதலில் ஒரு சிறுமி இந்த காரிலிருந்து இறங்குகிறாள். பள்ளி உடை அணிந்திருக்கும் அந்த சிறுமி அவசர அவசரமாக காருக்குள் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு குடிக்க கொடுக்கிறாள்.
Salute to the kid.
Even a bigger salute to her parents for nurturing right values at right age. #Humanity— Dharamveer Meena, IFS (@dharamifs_HP) December 7, 2021
அதன் பிறகு, சிறுமி காருக்கு சென்று, அதில் அமர்ந்துள்ள ஒரு ஆணை அழைத்து வருகிறார். ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்திருந்த கர்ப்பிணியை அழைத்துச் சென்று பிஎம்டபிள்யூ காரின் பின் இருக்கையில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, அந்த சிறுமியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மனிதநேயத்தின் உதாரணத்தை வீடியோவில் முன்வைக்கிறேன்
இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி தரம்வீர் மீனா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிரும் போது, 'இந்த குழந்தைக்கு சல்யூட்' என்று எழுதினார். வீடியோவைப் பகிர்ந்த பிறகு, இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பார்க்கப்பட்டுள்ளன. பலர் இந்த வீடியோ இயல்பானது அல்ல, உருவாக்கப்பட்டது என்றும் அழைக்கிறார்கள். ஆனால் 'வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டிருந்தாலும், அதன் மூலம் பரவும் செய்தி ஆக்கப்பூர்வமானதாக உள்ளது. இது மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வைரல் வீடியோ இது.
READ ALSO | மணமக்களை அதிரவைத்த பிராங்க்! இணையவாசிகளை கவர்ந்த வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR