Video: சவப்பெட்டியினுள் 11 நாள் உயிருக்கு போராடிய பெண்!

மற்றுமொரு அதிர்ச்சியான சம்பவத்தில், பிரேசிலிய பெண் ஒருவர் தவறுதலாக உயிரோடு புதைக்கப்பட்டுள்ளார்!

Last Updated : Feb 18, 2018, 05:40 PM IST
Video: சவப்பெட்டியினுள் 11 நாள் உயிருக்கு போராடிய பெண்! title=

மற்றுமொரு அதிர்ச்சியான சம்பவத்தில், பிரேசிலிய பெண் ஒருவர் தவறுதலாக உயிரோடு புதைக்கப்பட்டுள்ளார்!

புதைக்கப்பட்ட பின்னரும் உயிருடன் இருந்த அவர் 11 நாட்கள் உயிருக்கு போராடி, சவப்பெட்டியில் இருந்து வெளியே வர போராடியுள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 37 வயதான ரோஸங்கெல அல்மேடா டோஸ் சாண்டோஸ் ஆவர். 

மெட்ரோ அரிக்கையின் படி, முன்னதாக ரோஸங்கெல அல்மேடா இறந்துவிட்டதாக என்னி அவரது குடும்பத்தார் அவரை புதைத்துள்ளனர். அவரை புதைத்து 11 நாட்கள் ஆன பின்னர் அவரை புதைத்த இடத்தில் அசாதாரன சத்தங்கள் கேட்க துவங்கியுள்ளது. எனவே கல்லரை பாதுகாவலர் இதனையடுத்து அவரது கல்லரையில் இருந்து தான் சத்தம் வருகிறது என உருதி செய்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் அவரது கல்லரை திறக்கப்பட்டு, உடனடி சிகிச்சைக்காக அருகாமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார் என கூறி மருத்துவர்கள் அவரது உடலை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.

எனினும் அவர் அதற்கு முன்னதாக உயிருக்கு போராடியுள்ளார் எனவும், அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என இறப்பு சான்றிதழில் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ UK அளித்துள்ள அறிக்கையின் படி.. அவரை வைக்கப்பட்ட கல்லரையினில் நகங்களின் கீரல்களும், அவர் உயிருக்கு போராடியதற்கான அடையாளங்களும் தென்படுவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே அவர் புதைக்கப்பட்ட பின்னரும் 11 நாட்களுக்கு தன் உயிருக்கு போராடியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவத்தினை அங்கிருந்த மக்கள் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு!

Trending News