வீடியோ: குடிபோதையில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண்

போக்குவரத்து போலீசாரை தவறாக பேசி வாக்குவாதம் செய்த அனில் குமார் பாண்டே மற்றும் மாதுரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Edited by - Shiva Murugesan | Last Updated : Jul 17, 2019, 07:31 PM IST
வீடியோ: குடிபோதையில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் title=

புதுடில்லி: போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் தகராறு செய்த மற்றொரு வீடியோ டெல்லியில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு நபர் ஸ்கூட்டரை ஓட்டி வருகிறார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரியிடம் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த ஒரு பெண் திடீரென சண்டையிடுவதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி மாயாபுரி பகுதியில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், டெல்லி போக்குவரத்து காவல்துறையில் ஏ.எஸ்.ஐ. ஆகா இருக்கும் அதிகாரியுடன் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது.

ஸ்கூட்டரில் இருக்கும் ஒரு பெண்ணும், ஆணும் டெல்லி போக்குவரத்து போலீசாருடன் எவ்வாறு தகராறு செய்கிறார்கள் என்பதை வீடியோ காட்டுகிறது. ஸ்கூட்டரில் சவாரி செய்யும் அந்தப் பெண், எங்களை போக விடுங்கள் எனக்கூறி போக்குவரத்து போலீசாரை தள்ளிவிடுவதைக் காணலாம். இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் அமைதியாக இருங்கள், இப்படி செய்யக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் அந்த பெண் பொதுமக்களையும் அவதூறாக பேசியுள்ளார். 

இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி காவல்துறையில் போக்குவரத்து போலீசார் ஏ.எஸ்.ஐ. சுரேந்திராவின் புகாரின் பேரில் டெல்லி போலீசார் மாதுரி மற்றும் அனில்குமார் பாண்டே ஆகியோரை கைது செய்துள்ளனர்.

<iframe width="100%" height="350" src="https://zeenews.india.com/hindi/india/states/video/video-woman-without-h..." frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
 

உண்மையில், மாலை 7 மணியளவில், டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் ஸ்கூட்டரில் சவாரி செய்தா மாதுரி மற்றும் அனில் குமார் ஹெல்மெட் இல்லாமல் வண்டியை ஓட்டி வந்துள்ளனர். மேலும் ரெட் லைட்டில் ஜீப்ரா கிராசிங்கிற்கு முன்னால் வண்டியை நிறுத்தி உள்ளனர். இதைப்பார்த்த போலீசார் தடுத்து நிறுத்தி, ஓட்டுனர் உரிமத்தைக் காட்டும்படி கேட்டார். அதன்பின்னர் தான் தகராறு செய்யத்தொடங்கியுள்ளனர். ஸ்கூட்டர் மாதுரி மற்றும் அனில் இருவரும் குடிபோதையில் இருந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

Trending News