Man Stork Bird Friendship Viral Video: வாழ்க்கையில் நண்பர்களைப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் வகையில், மனிதர்கள் இடையேயான நட்பு குறித்த பல கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில், ஒரு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் தன்னலமற்ற நட்பு, நட்புக்கே சிறந்த முன்மாதரியாக திகழ்கிறது.
முகமது ஆரிப் என்ற 30 வயது இளைஞன் ஒரு பறவைக்கு நண்பனாக இருக்கிறார். அந்த பறவை எப்போதும் அவருடன்தான் இருக்கிறது. அந்த நட்பு மிகுந்த நாரை, ஆரிஃப் உடன் சுமார் ஒரு வருடமாக வாழ்ந்து வருகிறது. அவர் எங்கு சென்றாலும், எல்லா இடங்களிலும் அது அவருடன் செல்கிறது.
आरिफ उसे अपने घर ले आया. इलाज किया भोजन पानी दिया. पक्षी ठीक होने पर बजाए जंगल की ओर जाने के आरिफ के संग ही रहने लगा. आरिफ कहीं पर बाइक लेकर जाते हैं तो वह उनके ऊपर हवा में उड़ता रहता है, 30–40 किलोमीटर तक ऊपर उड़ान भरकर साथ साथ चला जाता है. अब सारस अपने रक्षक का मुरीद है pic.twitter.com/nvle4Jl1BF
— gyanendra shukla (@gyanu999) February 21, 2023
உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தின் மண்ட்கா கிராமத்தில் வசிப்பவர் ஆரிஃப். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது குடும்பம் முழுவதுமே நாரையை தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போல் அரவணைக்கிறது.
மேலும் படிக்க | யம்மாடி இவ்வளவு கோபமா..சிறுத்தையை கதற விட்ட வரிக்குதிரை: வீடியோ வைரல்
இதற்கிடையில், அவர் 2022ஆம் ஆண்டு, ஆகஸ்டில் ஒரு நாரை பறவையுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாரை காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, ஆரிஃப் தான் அதனை மீட்பு உயிரை காப்பாற்றினார். இது அந்த பறவைக்கு, ஆர்ஃப் மீது தனிப்பட்ட உணர்வை ஏற்படுத்தியது. அன்றில் இருந்து இன்று வரை, அந்த பறவை ஆரிஃப்பின் சிறந்த நண்பராகி, ஆரிஃப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறது.
இதுகுறித்து ஆரிஃப் கூறுகையில்,"பறவை காலில் காயத்துடன் கிடப்பதைக் கண்டேன். மருத்துவ சிகிச்சை அளித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். உணவளித்த பிறகு, பறவையை விடுவிப்பதற்காக வானத்தில் விட்டுவிட்டோம். அது போக விரும்பவில்லை. அப்போதிருந்து, அது எங்களுடன் வாழ்ந்து வருகிறது, எங்கள் நட்பு மிகவும் ஆழமானது, நாங்கள் எங்கு சென்றாலும் அது என்னுடன் வருகிறது" என்றார்.
In UP's Amethi, Mohammad Aarif has a unique best friend- A saras bird which follows Aarif whereever the latter goes. The "Jai-Veeru" bonding was forged after Aarif rescued and treated the bird after it got injured last year. pic.twitter.com/eWzCkWKQOP
— Piyush Rai (@Benarasiyaa) February 23, 2023
அவர்கள் பறவையை எதற்கும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார். நாள் முழுவதும் வானத்தில் பறந்துகொண்டே இருக்கும் அது, நாள் முடிவில் மீண்டும் அவனது வீட்டிற்கு வரும் என்றார். "இந்த நாரையுடனான எங்கள் பிணைப்பு ஒரு குடும்ப உறுப்பினருடன் இருப்பதைப் போன்றது அல்ல. இந்தப் பறவை அதையும் தாண்டி, மிகவும் சிறப்பு வாய்ந்தது,” என்று ஆரிஃப் குறிப்பிட்டார். இவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | நீர்யானை கூட்டத்தை தெறிக்க விட்ட ஒற்றை யானை! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ