Tasty Saree: இந்த சேலை கட்டுவதற்கு மட்டுமல்ல! சாப்பிடுவதற்கும் சுவையான புடவை!!

கேரள பெண் ஒருவர் உருவாக்கியிருக்கும் பிரத்யேக புடவையை உடுத்தலாம், உண்டு சுவைக்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 14, 2022, 03:31 PM IST
  • உடுத்தும் புடவையை உண்ணலாம்!
  • உடலில் கட்டுவதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதற்கும் சுவையான புடவை
  • உடுத்தலாம், உண்டு சுவைக்கலாம்
Tasty Saree: இந்த சேலை கட்டுவதற்கு மட்டுமல்ல! சாப்பிடுவதற்கும் சுவையான புடவை!! title=

ஆக்கப்பூர்வமான மனம் எதையும் செய்ய வைக்கும் என்பதை நிரூபிக்கும் வீடியோ இது. புதுமையான விஷயங்களை செய்வதில் பெண்கள் ஆர்வமாக இருக்கின்றனர். 

உலகின் முதல் உண்ணக்கூடிய புடவையை கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்துள்ளார். அதுவும் வெறும் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து. இந்த அற்புதமான புதுமையை செய்திருக்கிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்த சேலை வடிவமைப்பாளரின் பெயர் எலிசபெத் ஜார்ஜ். கேரளாவின் கொல்லம் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத், தொழில் ரீதியாக உயிரியல் ஆராய்ச்சியாளராக உள்ளார். சமீபத்தில் பி.எஸ்.எம்.எஸ்., பட்டப்படிப்பை முடித்துள்ளார். 

 

ஃபேஷன் டிசைனிங் மற்றும் உணவு தயாரிப்பில் ஆர்வம் கொண்டவர் எலிசபெத். இவரது மலர் மற்றும் பேக்கிங் முயற்சிக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. 

மேலும் படிக்க | சிங்கத்தை பந்தாடிய காட்டெருமை - வைரல் வீடியோ

எலிசபெத் ஜேக்கப் பேக்ஸ் (இது வடிவமைப்பாளர் கேக்குகளை உருவாக்குகிறது) மற்றும் ஜேக்கப் ஃப்ளோரல்ஸ் (நிகழ்வுகளுக்கான கைவினைப் பூக்கள்) ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.

'ஜேக்கப்' என்பது என் தாத்தாவின் பெயர். இவர் 33 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ரயில் விபத்தில் உயிரிழந்தார். பேக்கரி வைப்பது அவரது ஆசை. தாத்தாவின் கனவை நிறைவேற்ற, நான் எனது பேக்கிங் மற்றும் மலர் முயற்சிக்கு "ஜேக்கப்" என்று பெயரிட்டேன்” என்று சொல்கிறார் எலிசபெத்.

உண்ணக்கூடிய புடவை தயாரிக்கும் ஆர்வம் அவருக்கு எப்படி வந்தது? அது மிகவும் சுவாரசியமான கதை என்று சொல்கிறார் எலிசபெத். 

மேலும் படிக்க | தடாலடியாக நுழைந்த ரஷ்ய வீர்ரகள், விரட்டி அடித்த உக்ரைன் ஜோடி

"நான் மொட்டை மாடியில் இருந்தபோது, ​​என் அம்மாவின் புடவை காய்ந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தபோதுதான் உண்ணக்கூடிய புடவையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது".

எலிசபெத் இதை எப்படி தயாரித்தார் என்பது மிகவும் ஆச்சரியமானது. ஒரே வாரத்தில் இந்த வித்தியாசமான புடவையை எலிசபெத் உருவாக்கியிருக்கிறார் என்ற செய்தியுடன் வெளியாகியிருக்கும் வீடியோ வைரலாகிறது.

தனது சொந்த சமையலறையில் புடவையை உருவாக்கிய எலிசபெத், அதற்காக எந்தவொரு, ஆடம்பரமான கேஜெட்டையும் பயன்படுத்தவில்லை. 

மேலும் படிக்க | ஜாக்கிசான் போல காற்றில் பாய்ந்த தேவாங்கு! வைரல் வீடியோ!

சமையலறையில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு இந்த சேலையை உருவாக்கினார். ஸ்டார்ச் அடிப்படையிலான செதில் காகிதத்தை பயன்படுத்தியிருக்கிறார் எலிசபெத். உருளைக்கிழங்கில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டார்ச் இந்த காகிதத்தில் உள்ளது. 

A4 தாள் அளவிலான செதில் காகிதத்தை பயன்படுத்தியிருக்கிறார். சுமார் 100 தாள்கள் பயன்படுத்தப்பட்டு, 5.5 மீட்டர் நீளமுள்ள புடவை உருவாக்கப்பட்டது. 

வேஃபர் தாள்கள் 'கசவு'க்கான சரியான அமைப்பை அடைய உதவியது. அதன் மீது பாரம்பரிய வடிவத்தை உருவாக்க தங்க தூள் பயன்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ரூபாய் இந்த புடவையை உருவாக்கியது. இந்தப் புடவையின் எடை சுமார் 2 கிலோ.

மேலும் படிக்க | பூனையுடன் கண்ணாம்மூச்சி விளையாடிய பச்சைக்கிளி! வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News