அதிபர் Trump-ன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட Amazon!

அமெரிக்காவில் பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜாக்கார்ட்-ஸ்டைல் ஸ்வெட்டர்ஸ் உள்ளிட்ட ஆடைகள் உடுத்தும் பாரம்பரியம் உள்ளது. 

Last Updated : Dec 30, 2018, 04:13 PM IST
அதிபர் Trump-ன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட Amazon! title=

அமெரிக்காவில் பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜாக்கார்ட்-ஸ்டைல் ஸ்வெட்டர்ஸ் உள்ளிட்ட ஆடைகள் உடுத்தும் பாரம்பரியம் உள்ளது. 

நீண்ட காலமாக இருக்கும் இந்த பாரம்பரியத்திற்காக, பலவிதமான புதுவித ஆடைகள் இந்த நாட்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். ஜாக்கார்ட்-ஸ்டைல் வெளிவரும் போது தனக்கென்று தனி வடிவமைப்பினை கொண்டு வரும், இதன் காரணமாக இந்த ஆடைகளின் மீது மக்களின் ஆர்வம் நீங்காத ஒன்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட இரண்டு தலைவர்களின் படங்களை கொண்டு இந்த ஜாக்கார்ட்-ஸ்டைல் ஆடைகள் வெளியாகியுள்ளது. ஆனால் சற்று வித்தியாசமாக இரு பெரும் தலைவர்களையும் விமர்சித்து இந்த ஆடைகள் வெளியாகியுள்ளது,


Blizzard Bay Men's Polar Bear Power Ugly Christmas Sweater (Pic Courtecy : amazon.com)

யார் அந்த இரண்டு தலைவர்... அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின். 

பிரபல ஆன்லை விற்பனை தளமான அமேசானில் வெளியாகியுள்ள இந்த ஆடையில், இருதலைவர்களும் அரை நிர்வாணமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஆடை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Blizzard Bay நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த ஆடையானது ஆமேசான் வலைதளத்தில் $21.99 - $29.99 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Trending News