NASA-வின் திட்டத்தை விமர்சிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
விண்வெளி வீரர்களை நிலவுக்கு மீண்டும் அனுப்பும் நாசாவின் திட்டத்தை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது போன்று, இன்னும் பெரிய திட்டங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் இருத்மு திரும்பும் வழியில், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்தபடி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
For all of the money we are spending, NASA should NOT be talking about going to the Moon - We did that 50 years ago. They should be focused on the much bigger things we are doing, including Mars (of which the Moon is a part), Defense and Science!
— Donald J. Trump (@realDonaldTrump) June 7, 2019
இந்த பதிவில் இவர் குறிப்பிட்டுள்ளதாவது., "இப்போது செலவிடும் மொத்த தொகையை வைத்து பார்க்கும்போது, 50 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சாதித்துவிட்ட, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை பற்றி நாசா பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
அதற்குப் பதிலாக, நிலவுக்கு செல்வதையும் உள்ளடக்கி, செவ்வாய்க்கு செல்லும் திட்டத்தை போன்று, இன்னும் பெரிய திட்டங்களில் நாசா கவனம் செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா கவனம் செலுத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் இந்த திட்டத்திற்கு உதவும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றம் நாசாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அண்மையில் டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது.
ஆனால் தற்போது நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை குறித்து டிரப்ப் விமர்சித்து பேசிருப்பது ஊடகங்களுக்கு விவாத பொருளாய் மாறியுள்ளது.