இசை எங்கிருந்தெல்லாம் வருது ? சேர்ல இருந்தும் வரும்... மைக்ல இருந்தும் வரும்! வீடியோ வைரல்

Music Concert Video Viral: இசையைக் கேட்டால் மனதில் இனிமை பொங்கும். அதிலும், ரசித்து ருசித்து, பிறரும் ரசிக்கும்படி கொடுக்க முடியும் என்பதை காட்டும் ஒரு வீடியோ, இணையத்தில் டிரெண்டிங் ஆகிறது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2023, 07:34 PM IST
  • இசையைக் கேட்டால் மனதில் இனிமை பொங்கும்
  • ரசித்து ருசித்து, பிறரும் ரசிக்கும்படி கொடுக்கும் வைரல் வீடியோ
  • இணையத்தில் டிரெண்டிங் ஆகும் இசைக் கச்சேரி
இசை எங்கிருந்தெல்லாம் வருது ? சேர்ல இருந்தும் வரும்... மைக்ல இருந்தும் வரும்! வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: பரந்து விரிந்த உலகத்தை இணைய வசதிகள், நமது கைக்குள் அடக்கிவிட்டாலும், அது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள இணையம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள உதவுகிறது.

ஒரு காலத்தில் திரைப்படம் மட்டுமே பொழுதுபோக்கு என்று இருந்த நிலை இன்று மாறி, அது பின்னுக்கு தள்ளப்பட்டு, நம் கைக்குள்ளேயே பொழுதுபோக்கு உலகம் சுருங்கிவிட்டது. பொழுதுபோக்கு என்றால் வீடியோக்களும் நடனமும் திரைப்படம் பார்ப்பது மட்டும் தானா? இசையை இசைப்பதும் ரசிப்பதும் ஆகச் சிறந்த பொழுதுபோக்காக என்றென்றும் உள்ளது.

இசைக் கச்சேரிகள் பலவிதம், அதில் இந்திய பாரம்பரிய இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் வேறுபாடு உள்ளது. எதுஎப்படியிருந்தாலும், இசை என்பது அனைவருக்கும் பிடித்தமானது. இசையை ரசிக்க ஒரு கூட்டம் இருந்தால், அதை விதவிதமாய் கொடுக்க கலைஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: ஸைபடர்மேன் அவதாரம் எடுத்து... மிரள வைத்த மியாவ் பூனை...!

இசையைக் கேட்டால் மனதில் இனிமை பொங்கும். அதிலும், ரசித்து ருசித்து, பிறரும் ரசிக்கும்படி கொடுக்க முடியும் என்பதை காட்டும் ஒரு வீடியோ, இணையத்தில் டிரெண்டிங் ஆகிறது.

பார்த்தாலே மனதை இலகுவாக்கும் இந்த வீடியோவில் நடைபெறும் இசைக் கச்சேரியில் வாத்திய இசையை எப்படியெல்லாம் இசைக்க முடியும் என்று இசைக் கலைஞர் ஜாலியாக செய்வதும், அவரது மனதில் உள்ள மகிழ்ச்சி முகத்தில் வெளிப்படுவதும் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

வைரல் வீடியோ

 சமூக ஊடக தளமான எக்ஸ் வலைதளத்தில் @buitengebieden என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ மில்லியன்கணக்கானவர்களின் லைக்குகளை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

இந்த வீடியோவை பார்த்து ரசிக்கும்போது, இசை எங்கிருந்து வருது தெரியுமா என்ற வடிவேலுவின் திரைப்படக் காமெடி காட்சி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த இசை நகைச்சுவையுடன் தொடர்புடையது இல்லை என்றாலும் இசை எங்கிருந்து வருது என்ற வார்த்தைகளே வடிவேலுவின் நகைச்சுவை காட்சியுடன் தொடர்புபடுத்தி விடுகிறது. 

ஜாலியாக ரசித்து அனுபவித்து இசைக்கும் இசைக் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. பார்த்து ரசிப்பதுடன் நின்றுவிடாமல், கொஞ்சம் லைக்கும் போட்டால், அவரது மகிழ்ச்சி பலமடங்காகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News