சுற்றுலா என்பது ஒரு அலாதியான பிரியம். வாழ்க்கையின் எதார்த்தங்களை அறிந்து கொள்ள உதவும் பயணம். ஒவ்வொரு வரும் வாழ்க்கையில் அனைத்து தருணங்களிலும் பயணம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த வாழ்வின் அனைத்து பக்கங்களையும் உணர்ந்து கொள்ள முடியும். அந்தவகையில் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்வது என்பது இயற்கையின் பேரழகையும், விலங்குகளின் குணாதிசயங்களையும் நேரடியாக கண்டுணரும் திரில்லிங்கான அனுபவம். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில் வனப்பகுதிக்குள் வேன் மூலம் சுற்றுலாப் பயணிகள் சென்று வன விலங்குகளை பார்க்கலாம். முறையான அனுமதி மற்றும் பணம் செலுத்தி வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்லலாம்.
மேலும் படிக்க | Viral Video: குட்டியை காக்க போராட்டும் பல்லி! கபளீகரம் செய்யும் பாம்பு!
அவ்வாறு சுற்றுலா சென்றவர்களை காட்டு யானை ஒன்று ராட்ச தந்தத்துடன் தாக்க வேகவேகமாக ஓடி வருகிறது. அப்போது, சுற்றுலா பயணிகளை வாகனத்தில் அழைத்துச் சென்ற ஓட்டுநர், துளியும் பயப்படவில்லை. மாறாக, யானை தாக்க வரும்போது வாகனத்தை பின்நோக்கி இலகுவாக இயக்குகிறார். வண்டி ஓட்டுவதில் சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், வண்டியை பின்னோக்கி சர்வ சாதரணமாக ஓட்டி அனைவரையும் பத்திரமாக பாதுகாத்துள்ளார்.
— anand mahindra (@anandmahindra) September 12, 2022
துரத்தி வந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே ஆக்ரோஷமாக ஓடி விடுகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் அந்த ஓட்டுநரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வண்டியில் உள் பகுதியில் இருக்கும் சென்டர் கண்ணாடியை பார்த்துக் கொண்டு, யானை துரத்தி வரும் வேகத்தையும் பார்த்து அசாத்தியமாக வண்டியை இயக்கியுள்ளார் என பாராட்டியுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திராவும், அவரை வெகுவாக டிவிட்டரில் பாராட்டியிருக்கிறார். யானையின் தாக்குதலில் இருந்து பத்திரமாக வாகனத்தை ஓட்டிய அவர் தான் சிறந்த ’கேப்டன் கூல்’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கபினி வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வண்டியை பிரகாஷ் என்பவர் ஒட்டியிருக்கிறார். கடினமான நேரத்தில் இலகுவாக வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தி சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றிய அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ