சிறுத்தையை ஓட விட்ட நாய் - வைரல் வீடியோ..!

தாக்க வந்த சிறுத்தையை நாய் ஒன்று கம்பீரமாக எதிர்த்து ஓட விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:31 PM IST
  • நாயை தாக்க வந்த புலி
  • கம்பீரமாக எதிர்த்த நாய்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
சிறுத்தையை ஓட விட்ட நாய் - வைரல் வீடியோ..!  title=

சிறுத்தையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினம். வேகமாக ஓடுவது முதல் மரம் ஏறுதல், நீந்துதல் வரை என அனைத்து அறிந்த சிறுத்தை, இரைக்காக விலங்குகளை துல்லியமாக வேட்டையாடிவிடும். குறி வைத்த விலங்கு ஏற்ப, அதனுடைய தாக்குதல் யுக்தி இருக்கும். தொலைவில் விலங்கு இருந்தால் பதுங்கி சென்று நொடிப்பொழுதில் இரையை தாக்கிவிடும்.

ஓடிப் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் சளைக்காமல் துரத்திச் சென்று பாய்ந்து பிடித்துவிடும். இதனால், வனத்தின் ராஜா ‘புலி’ என வனவிலங்கு நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால், அந்த புலியை எதிர்த்து, அதற்கே பயத்தை காட்டி ஓடவிட்டால் அந்த விலங்கின் சாமார்த்தியம் என்னவாக இருக்கும் என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். நாறில் ஒரு விலங்கு மட்டுமே புலியை தீரத்துடன் எதிர்த்து ஓடவிடும். அந்தவகையில் நாய் ஒன்று தன்னை தாக்க வந்த புலியை தீரத்துடன் எதிர்த்து திரும்ப ஓடச் செய்துள்ளது.

மேலும் படிக்க | துணிக்கடையில் துணிகரம்: டிரையல் ரூமில் மறைந்திருந்தது யார்? வைரல் வீடியோ

அந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் பசுமையான புல்வெளிக்கு அருகாமையில் இருக்கும் பாதையில் நாய் படுத்திருக்கிறது. அந்த புல்வெளிக்குள் இருக்கும் புலி, கணப்பொழுதில் நாயை தாக்க வருகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத நாய், அந்த புலியை நோக்கி சத்தமாக குறைக்கிறது. நாயின் குறைப்பு சத்தம் மிகமிக அதிகமாக இருந்ததால், அந்த புலியை நாய் நோக்கி ஒரு அடியைக் கூட எடுத்துவைக்கவில்லை. கடைசி வரை நாயின் குறைத்துக் கொண்டே இருந்ததால், அடிக்க வந்த புலி பின்வாங்கி வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது.  

மேலும் படிக்க | 42 நொடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த யூடியூபர்..! எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News