நல்லா தூங்குறவங்களை கட்டிபிடிச்சா என்ன நடக்கும்? வெக்கம் வருமா? இல்லை தூக்கம் வரும்

Know Power Of Cuddling: நல்லா தூங்குறவங்களை கட்டிபிடிச்சா என்ன நடக்கும்? வெக்கம் வருமா? இல்லை தூக்கம் வரும், அசடு வழிய வைக்கும் கட்டிப்புடி வைத்தியம் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2023, 04:48 PM IST
  • ஆவலுடன் பார்த்தால் அசடு வழிய வைக்கும் நோ ரொமான்ஸ் வீடியோ
  • நல்லா தூங்குறவங்களை கட்டிபிடிச்சா என்ன நடக்கும்?
  • வெக்கம் வருமா? இல்லை தூக்கம் வரும்
நல்லா தூங்குறவங்களை கட்டிபிடிச்சா என்ன நடக்கும்? வெக்கம் வருமா? இல்லை தூக்கம் வரும் title=

நாம் தொடும்போதும், அரவணைக்கும்போதும், கட்டிப்பிடிக்கும்போது அல்லது கைகளைப் பிடித்துக் கொள்ளும்போதும், உடலில் இருந்து "நன்றாக உணரும்" ஹார்மோன்கள் வெளியாகின்றன. இந்த ஹார்மோன்களில் ஆக்ஸிடாஸின், டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவை அடங்கும். ஹார்மோன்கள் நம் உடலில் வெளியிடப்பட்டவுடன், மகிழ்ச்சி, ஆறுதல், மனநிலை மேம்படுதல் மற்றும் மனச்சோர்வு குறைவது போன்ற உணர்வுகளை அனுபவிக்கிறோம். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அரவணைப்பு

மனச்சோர்வடைந்த நிலையில், ஒரு கட்டிப்பிடி வைத்தியம், நமது உணர்வுகளை லேசாக்கும். ஆறு வினாடிகளுக்கு மேல் கட்டிப்பிடிப்பது அல்லது அரவணைப்பது அதிகபட்ச அளவில் ஆக்ஸிடாசின் மற்றும் செரோடோனின் வெளியிடப்படுவதாக ஆய்வுகள் உள்ளன.

அரவணைப்பு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆரோக்கியமாக இருப்போம் என்ற வாக்கியத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மைதான்! நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது செரோடோனின் மற்றும் ஆக்ஸிடாஸின் உகந்த அளவுகளை வெளியிடுகிறோம், மேலும் செரோடோனின் நோயெதிர்ப்பு அமைப்பு மேம்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நீ பாம்போ பல்லியோ எங்கிட்ட வம்பு வச்சுக்காத! பாம்பை பதம் பார்த்த பூரான் வீடியோ

ஹார்மோன்களின் அறிவியலுக்கு அப்பால், நாம் யாரையாவது கட்டிப்பிடித்து அல்லது அரவணைக்கிறோம் என்றால், அது ஒருவேளை நாம் அக்கறை கொண்ட ஒரு நபராக இருக்கலாம். இந்த மக்கள் பொதுவாக நம்மை மகிழ்விக்க வேண்டும்.

நாம் மகிழ்ச்சியாகவும் அக்கறையுடனும் உணரும்போது, எதிர்காலத்தைப் பற்றி பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் உணர்கிறோம், இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது, இது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கும். ஒருவரை கட்டிப்பிடித்து அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

சரி இந்த விஷயம் எல்லாம் மனிதர்களுக்கு சரிதான், ஆனால் விலங்குகளுக்கு? அதிலும் காட்டுக்கு ராஜாவான சிங்கத்துக்கு தெரியுமா? இதற்கான பதில் கண்டிப்பாக தெரியும் என்று, சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோ உணர்த்துகிறது.

மேலும் படிக்க | ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கும் வால் பையன்! ரவுண்ட்ஸ் போகும் கோழி

தூங்கும்போது கட்டிப்பிடித்தால் என்ன ஆகும்? ரொமான்ஸ் என்று நினைக்கிறீர்களா? இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், அதற்கு முன் இந்த வீடியோவை ஒரு முறை பார்த்துடுங்க....

இந்த வீடியோவைப் பார்த்தால், ரொமான்ஸ் செய்வதற்காக சிங்கம், தனது இணையை சீண்டவில்லை என்பதும், நீ அப்படி சீண்டினாலும் நான் கண்டுக்க மாட்டேன், உனக்கு இதே பொழப்பா போச்சா என்ற சலிப்பில் பெண் சிங்கம் திரும்பிப் படுத்துக் கொள்கிறது, திருமணமாகி சில ஆண்டுகள் ஆன தம்பதிகளின் அலுப்பையும், ஆசையையும் போல இருக்கிறது.

எவ்வளவு தான் டிரை பண்ணாலும் அசர மாட்டேங்கிறாளே என்று அலுத்துப் போய், தூங்க ஆரம்ப்பிக்கும் சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் ‘பந்தா’ காட்டிய பெண்ணின் ரொமான்ஸ் இல்லாத தன்மையும் அழகு. இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

அரவணைப்பு மற்றும் கட்டிப்பிடித்தல் ஆகியவை முக்கியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆதலினால் காதல் செய்வீர் என்ற மந்திரத்திற்கு ஏற்ப, தினமும் நீங்கள் விரும்பும் ஒருவரை கட்டிப்பிடிக்கவும்

மேலும் படிக்க | ராஜநாகத்தை சீண்டிய இளைஞர்-சீறிப்பாய்ந்து படமெடுத்த நாகம்..! இதயத்துடிப்பை எகிற வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News