Breaking! 'பிக் பாஸ் 4' இல் மூன்றாவதாக நுழையும் வைல்ட் கார்டு போட்டியாளர் இவரே!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' இன்று ஒரு மாத ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது, இதுவரை அசல் பதினாறு போட்டியாளர்களில் ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Last Updated : Nov 4, 2020, 03:05 PM IST
Breaking! 'பிக் பாஸ் 4' இல் மூன்றாவதாக நுழையும் வைல்ட் கார்டு போட்டியாளர் இவரே! title=

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' இன்று ஒரு மாத ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது, இதுவரை அசல் பதினாறு போட்டியாளர்களில் ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேற்றப்பட்டுள்ளனர். அர்ச்சனாவும் சுசித்ராவும் வைல்ட் கார்டுகள் மூலம் வீட்டிற்குள் நுழைந்து நிகழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ ஷங்கர் 'பிக் பாஸ் 4' (Bigg Boss Tamil) நிகழ்ச்சியில் மூன்றாவது வைல்ட் கார்டு நுழைவு என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்திரஜாவின் சொந்த இன்ஸ்டாகிராம் இடுகையால் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது, அதில் மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அதே ஹோட்டலில் இவரும் இருக்கும் போல் போட்டோவை வெளியிட்டுள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17) on

 

ALSO READ | Bigg Boss பாலாவுக்கு போட்டி: wildcard entry-யாக வரப்போகிறாரா ஷிவானியின் சீரியல் ஹீரோ

 

இந்நிலையில் பாடகி சுசித்ராவுக்கு அடுத்த போட்டியாளராக ரோபோ ஷங்கரின் மகள், பிகில் பட நடிகை இந்திரஜா பங்கேற்கிறார் என்ற செய்தி மிகவும் வைரலாகி வருகிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. '

 

ALSO READ | பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? இவர்தாங்க மாப்பிள்ளை...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News