வீட்டில் வளரும் கோழிக் குஞ்சுகள் அவ்வப்போது பறப்பதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. கழுகு அல்லது காகம் ஆகியவை வந்து கோழிகளின் குஞ்சுகளை இரைக்காக தூக்க வரும்போது தாய்க்கோழிகள் பறந்து பறந்து அவற்றை விரட்டும். அந்த நேரத்தில் நீங்கள் அருகில் இருந்தீர்கள் என்றால், கோழிகளால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பதை பார்க்கலாம். நீங்களே வளர்த்த கோழி என்றாலும், அவ்வளவு உயரத்துக்கு பறக்குமா? என்பதை அப்போது தான் முதன்முதலாக பார்ப்பீர்கள்
மேலும் படிக்க | பாண்டா குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஊழியர்! வைரலாகும் வீடியோ!
அதுவே உங்களுக்கு விய்ப்பு ஏற்படுத்தும். ஏனென்றால் பறக்கவே பறக்காது என நினைத்துக் கொண்டிருந்த கோழி, உங்கள் கண்முன்னே சில அடி உயரத்துக்கு பறக்கும்போது அப்படியான எண்ணம் தோன்றுவது இயல்பு தான். ஆனால், வீடியோவில் வைரலாகியிருக்கும் கோழியானது கற்பனைக்கும் விஞ்சியதாக இருக்கிறது. மிகப்பெரிய ஆறு ஒன்றை இக்கரையில் இருந்து அக்கரைக்கு லாவகமாக பறந்தவாறு கடக்கிறது. சில அடி தூரம் கோழிகள் பறக்கும் என்பதை ஏற்கனவே பார்த்தவர்கள் கூட, இந்தக் கோழி ஆற்றைக் கடக்கும் வீடியோவை பார்த்தால் நிச்சயம் அசந்துபோவார்கள்.
This is Amazing pic.twitter.com/8Syzdw6BnP
— Amazing Nature (@AmazingNature00) February 24, 2022
அந்த வீடியோவில் கும்பலாக ஆறு ஒன்றின் அருகே கோழிகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. திடீரென ஒரு கோழி மட்டும் ஆற்றை பறந்து கடக்கிறது. வீடியோ பதிவு செய்யப்பட்ட இந்தக்காட்சி இணையத்திலும் வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்துபோயுள்ளனர். அந்த கோழி பறவையாக பிறந்திருக்க வேண்டிய ஒன்று, தப்பித் தவறி கோழியாக பிறந்துவிட்டதாக தெரிகிறது என ஜாலியாக கமெண்ட்டும் அடித்துள்ளனர்.
மேலும் படிக்க | நாயைக் காப்பாற்ற சென்ற நபருக்கு வந்த சோதனை: காண்டான கங்காரு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR