Viral Video: குட்டிக்கு தில்ல பார்த்தியா... பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் சிறுமி!

Snake Viral Video: பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 4, 2023, 01:32 PM IST
  • பாம்புகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் சிறுமி.
  • வைரலாகும் பாம்பு வீடியோ.
  • பாம்பு என்றால் படையே நடுங்கும்.
Viral Video: குட்டிக்கு தில்ல பார்த்தியா...  பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் சிறுமி! title=

இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும். வைரலாகும் அந்த வீடியோவில்,  பாம்புகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் ஒரு சிறுமியை காணலாம். துளி கூட அச்சம் என்பதே இல்லாமல் அந்த சிறுமி நடந்து கொள்ளும் விதம் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் பாம்பு வீடியோவை இங்கே காணலாம். பாம்பு அவரது விரலை சுற்றிக் கொண்டு அங்கே ஊர்ந்து ஊர்ந்து செல்வதைப் பார்த்தால் திகிலாக இருக்கிறது. வைரலாஅகும் வீடியோவை கீழே காணலாம்.

வைரலாகும் பாம்பு வீடியோ:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ariana (@snakemasterexotics)

 

சில நாட்களுக்கு முன் வைரலான ஒரு வீடியோவில், முட்டையை திருடுவதற்காக, கூடைக்குள் நுழைந்த ஒரு பாம்பு, வாயில் முட்டையுடன் கூடையில் சிக்கிக் கொண்டது. உயரத்தில் முட்டையுடன் கூடிய கூடை வைத்திருந்த நிலையில், அதனை சாப்பிட பாம்பு அங்கு வந்துள்ளது. கூடையின் பக்கங்களில் உள்ள துளைகள் மூலம் பாம்பு அதன் முகத்தையும் அதன் உடலின் ஒரு சிறிய பகுதியை நுழைத்துக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அது முட்டையை விழுங்கிய போது, அதன் தொண்டை பகுதி பெரிதானதால், கூடையிலிருந்து வாயை வெளியே எடுக்க முடியவில்லை. முட்டையைக் கை விடாமல் கூடையிலிருந்து வெளியேற பாம்பு போராடுவது வீடியோவில் காணலாம். இறுதியில், பாம்பு முட்டையை வெளியே துப்ப வேண்டியிருந்தது. இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!

இதற்கு நேர்மாறாக, தவளை  ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. பாம்பின் பெயரை கேட்டால் எட்டாத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News