WATCH: பிரியா வாரியார் நடிப்பில் உருவான ஸ்ரீதேவி பங்களா teaser....

இணையத்தில் வைரலாகும் பிரியா பிரகாஷ் வாரியார் நடிப்பில் உருவான ஸ்ரீதேவி பங்களாவின் டிரெய்லர் வீடியோ....

Last Updated : Jan 15, 2019, 01:59 PM IST
WATCH: பிரியா வாரியார் நடிப்பில் உருவான ஸ்ரீதேவி பங்களா teaser.... title=

இணையத்தில் வைரலாகும் பிரியா பிரகாஷ் வாரியார் நடிப்பில் உருவான ஸ்ரீதேவி பங்களாவின் டிரெய்லர் வீடியோ....

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் ஓட்டலின் குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த காட்சியை சித்தரிக்கும் வகையில் குளியல் தொட்டியில் கால் மட்டுமே தெரியும் வகையில் படமாக்கப்பட்ட காட்சி 'ஸ்ரீதேவி பங்களா' டீசரில் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.  இதில் ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிப்பவர் பிரியா பிரகாஷ் வாரியார்.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் ஒரே பாடல் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியார். இந்நிலையில் இவரின் 'ஸ்ரீதேவி பங்களா' எனும் புதிய படத்தின் டீஸர் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு என கூறப்படும் இந்த திரைப்படத்தின் டீஸர் 1 நிமிடம் 49 நொடிகள் ஓடக்கூடியது. இதில் செலிபிரிடீயாக வளம் வரும் பிரியா மது அருந்துவது, புகை பிடிப்பது, போன்ற காட்சிகளும் வருகிறது. 

இறுதியில் டைட்டில் வரும்போது ஸ்ரீதேவியின் மர்ம மரணத்தை குறிக்கும் வகையில் குளியல் தொட்டியில் இரண்டு கால்கள் மட்டும் காட்டப்பட்டவாறு டீஸர் முடிக்கப்படுகிறது. இந்த டீஸர் தற்பொழுது சமூகவலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.  அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

 

Trending News