பாம்புக்கும் முதலைக்கும் செம சண்டை: இப்படி ஒரு சண்டைய பார்த்திருக்க முடியாது

Animal Fight Video: பாம்புக்கும் முதலைக்கும் கடுமையான சண்டை. சண்டையில் வெல்லப்போவது யார்? இந்த திக் திக் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 05:38 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • வீடியோவில் தண்ணீரில் இருந்து வெளியே வந்த முதலை தரையில் இருக்கும் பாம்பை தாக்குவதை காண முடிகின்றது.
பாம்புக்கும் முதலைக்கும் செம சண்டை: இப்படி ஒரு சண்டைய பார்த்திருக்க முடியாது title=

வைரல் வீடியோ: இணையத்தில் பல விதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இவற்றில் நாம் பல அரிய காட்சிகளையும் காண்கிறோம். சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நிலத்தில் பாம்பு மிகவும் ஆபத்தான விலங்காகக் கருதப்பட்டாலும், தண்ணீரின் ராஜா முதலைதான். இரண்டுமே மிகவும் சக்தி வாய்ந்தவை. எந்த மிருகமும் இவற்றுடன் நட்பு கொள்ள ஆசைப்படாது.  அவற்றுடன் பழகுவதற்கு முன் நூறு முறை சிந்திக்கும். ஆனால் இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையே சண்டை நடந்தால் வெற்றி எதற்கு கிடைக்கும்? இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

பாம்பை தாக்கிய முதலை 

இந்த வீடியோவில் தண்ணீரில் இருந்து வெளியே வந்த முதலை தரையில் இருக்கும் பாம்பை தாக்குவதை காண முடிகின்றது. இந்த தாக்குதலில் இருந்து தப்பித்து பாம்பு முதலைக்கு பாடம் கற்பிக்குமா அல்லது தானே பலியாகுமா என்பதுதான் இப்போது பார்க்க வேண்டிய விஷயம். 

மேலும் படிக்க | மூடில் வந்து டான்ஸ் ஆடிய தாத்தா, ஈடுகொடுத்து குத்தாட்டம் போட்ட பாட்டி: வைரல் வீடியோ

பாம்பு முதலை இடையிலான திகிலூட்டும் சண்டையின் வீடியோவை இங்கே காணலாம்

வென்றது யார்? 

இந்த தாக்குதலுக்கு பாம்பு தயாராகவே இல்லை என்பதை வீடியோவை பார்த்து புரிந்துகொள்ள முடிகின்றது. முதலையை எதிர்ப்பதெல்லாம் பிறகு, முதலில் முதலையின் பிடியில் இருந்து வெளிவரவே பாம்பு திண்டாடுகிறது. விசாலமான முதலைக்கு முன்னால் பாம்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறிது நேரத்தில், பாம்பின் ஆட்டம் முடிந்தது. முதலைக்கும் பசியை போக்க நல்ல இரை கிடைத்தது. முதலையுடன் பாம்பு முடிந்தவரை போராடுகிறது. தண்ணீருக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய போதிலும், பாம்பால் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

வீடியோ வைரலானது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான வீடியோ பலரை வியக்க வைத்துள்ளது, அதிசயிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு கூற்று நினைவுக்கு வருகிறது. ‘பலவான் வெல்வான்’ என்ற பழமொழிதான் அது. காட்டிற்குள் அதுதான் இன்றும் உண்மையாக நடக்கிறது. 

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | திருடனை பிடிக்க அருமையான திட்டம் தீட்டிய கடைக்காரர்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News