சகோதரர்களாக மாறிய சகோதரிகள்: பாகிஸ்தானில் நடந்த வினோத Sex Change Operation

குழந்தைகளில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தென்பட்டால், சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பயன்களை அளிக்கும். அதிக தாமதத்தால் அதிக சிக்கல்கள் ஏற்படலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2020, 01:24 PM IST
  • பாகிஸ்தானில் இரு சகோதரிகள் சகோதரர்களாக மாறினர்.
  • பாலின அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த மாற்றம்.
  • பாலின மாற்றம் இந்நாட்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
சகோதரர்களாக மாறிய சகோதரிகள்: பாகிஸ்தானில் நடந்த வினோத Sex Change Operation title=

“நான் இஸ்லாமாபாதிலிருந்து ஆணாக மாறி குஜராத் வந்துள்ளேன். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு சிறு வயதிலிருந்தே பெண்களின் ஆடைகளை அணிய பிடித்ததில்லை. என செயல்களும் நடத்தையும் ஆண்களைப் போலத்தான் இருந்தன. என் சகோதரர் ஆபித்தும் மகிழ்ச்சியாக இருக்கிறார்." என்று கூறுகிறார் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குஜராத் மாவட்டத்தைச் சேர்ந்த சோன்பரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் வாலித் ஆபித்.

பாலியல் மாற்று நடவடிக்கைக்கு முன்பு அவரது பெயர் புஷ்ரா ஆபித். அவரது தம்பி முராத் ஆபித், ஒன்பதாம் வகுப்பு மாணவர். அறுவை சிகிச்சைக்கு முன்பு அவர் வாஃபியா ஆபித் என்றழைக்கப்பட்டார். அவர்கள் இருவரும் பஞ்சாபின் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கு மருத்துவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது

வலீத் மற்றும் முராதின் பெற்றோர் 1993 ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, அவர்களுக்கு ஒன்பது மகள்கள் பிறந்தார்கள். இருப்பினும், இரண்டு சகோதரிகளின் பாலியல் மாற்ற (Sex Change) நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர்களுக்கு இப்போது ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். வலீத் அவர்களது ஐந்தாவது பெண்ணாகவும் முராத் ஆறாவது பெண்ணாகவும் பிறந்தனர்.

இரு சகோதரிகளின் பாலின மாற்ற அறுவை சிகிச்சை இஸ்லாமாபாத்தின் (Islamabad) பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது. டாக்டர் அம்ஜத் சவுத்ரி தலைமையில் 12 மருத்துவர்களைக் கொண்ட குழு இதை மேற்கொண்டது. ஊடகங்களுடன் பேசிய டாக்டர் அம்ஜத் சவுத்ரி, இதற்கு முன்பு பாலியல் ஆபரேஷன்களை தான் செய்துள்ளதாகவும், ஆனால் இந்த வழக்கு வேறுபட்டதாக இருந்ததாகவும் கூறினார். இரு சகோதரர்களும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.

டாக்டர் சௌத்ரி கூறுகையில், "இந்த இருவருக்கும் நாங்கள் தனித்தனியாக அறுவை சிகிச்சைகளை செய்தோம். செப்டம்பர் 20 ஆம் தேதி வலீத் ஆபித் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் மருத்துவமனையின் ஐசியுவில் இருந்தார். அறுவை சிகிச்சை திருப்திகரமான முறையில் நடந்தது உறுதியானவுடன், நாங்கள் அக்டோபர் 10 அன்று முராத் ஆபிதுக்கு அறுவை செகிச்சையை செய்தோம்” என்றார்.

டாக்டர் அம்ஜத்தின் கூற்றுப்படி, இந்த அறுவை சிகிச்சைகள் ஆறு மணி நேரம் நீடித்தன. அதில் பல மருத்துவர்கள் அவ்வப்போது கலந்து கொண்டனர். இரு சகோதரர்களும் அக்டோபர் 21 அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ: வெட்ட வெளியில் மியா கலிஃபா செய்த அறுவறுப்பான செயல்... தீயாய் பரவும் வீடியோ!

பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை ஏன்?

அபோதாபாத்தின் அயூப் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் ஜுனைத் கூறுகையில், "சில குழந்தைகளின் பாலினம் பிறக்கும்போதே தெளிவாக இருப்பதில்லை. காரணம், அத்தகைய குழந்தைகளின் பிறப்புறுப்புகள் முற்றிலும் தெளிவான வடிவத்தை எடுக்க முடிவதில்லை. இவர்களுக்கு இரண்டு பாலினங்களின் சிறப்பியல்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமான பிறப்புறுப்பு என்ற நோய் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.

இந்த நோய் பொதுவாக பிறவி நோயாக உள்ளது. இது உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் பாலியல் வளர்ச்சிக்கு தடையாக அமைகிறது. மிகச் சிலருக்கு இந்த நோய் வருவதாக மருத்துவர் அம்ஜத் சவுத்ரி தெரிவித்தார். சுமார் 0.5 முதல் 0.7 சதவீதம் பேருக்கு மட்டுமே இது ஏற்படுகிறது.

"தற்போது நடந்த அறுவை செகிச்சையில், இருவரும் வெளித் தோற்றத்திற்கு பெண்களாக இருந்தாலும், அவர்களுக்கு பெண்கள் அல்லது பெண்களின் எந்த குணாதிசயங்களும் இல்லை." என்றார் மருத்துவர்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகும், அவர்கள் இருவரும் மாதவிடாயைப் பெறவில்லை என்று மருத்துவர் அம்ஜத் கூறினார். அவர்களது தாயார் அவர்களை குஜராத்தில் (Gujarat) பரிசோதித்தார். அங்கிருந்து அவர் பிம்ஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

முதற்கட்ட சோதனைகளில், இருவரும் வித்தியாசமான பிறப்புறுப்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை தேவை என்றும் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார். இந்த அறுவை சிகிச்சையின் மூலம், அவர்களது பிறப்புறுப்புகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

டாக்டர் அம்ஜத் சவுத்ரியின் கருத்துப்படி, இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் சிகிச்சை தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்னர் முக்கியமான உளவியல் சோதனைகள் மற்றும் ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹார்மோன்கள் (Hormones) மருந்துகளின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ALSO READ: Viral Video: COVID தடுப்பூசி போட்ட கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்த செவிலியர்..!

இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பு இப்படிப்பட்ட பல அறுவை சிகிச்சைகளை தான் செய்துள்ளதாகவும், ஆபரேஷனுக்குப் பிறகு பலர் நல்ல வாழ்க்கை நடத்தி வருவதாகவும் மருத்துவர் அம்ஜத் சவுத்ரி தெரிவித்தார். ஆனால், பாலின மாற்று அறுவை சிகிச்சை (Sex Change Operation)செய்வதற்கான முடிவு 100 சதவீதம் நோயாளியுடையதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

"இந்த சகோதரர்களின் விஷயத்திலும், நாங்கள் இருவருக்கும் முடிவு செய்ய போதுமான வாய்ப்பை வழங்கினோம். எங்கள் மனநல மருத்துவரும் அவர்களுடன் பேசினார்கள்.” என்று அறுவை சிகிச்சை மருத்துவர் அம்ஜத் சவுத்ரி கூறினார்.

தங்கள் குழந்தைகளின் உடற்கூறியல், பிறப்புறுப்பு மற்றும் அவர்களின் நடத்தை ஆகியவை வேறுபட்டிருப்பதாக பெற்றோர்கள் உணர்ந்தவுடனேயே அவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறுகிறார் டாக்டர் சௌத்ரி.

குழந்தைகளில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தென்பட்டால், சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பயன்களை அளிக்கும். அதிக தாமதத்தால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News