Snake Fair Viral Video: இந்தியாவில் மட்டும் சுமார் 300 வகை பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதில் சுமார் 60 வகை பாம்புகள் விஷத்தன்மை வாய்ந்தது எனவும் கூறப்படுகிறது. எனவேதான் இந்தியாவில் மற்ற நாடுகளை விட விஷப்பாம்புகள் கடித்து மனிதர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது எனலாம். அதுவும் மழைக்காலங்களில் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையாக நிகழும்.
அதே வேளையில்தான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாம்புகளை தெய்வாகமாக வழிபடும் போக்கும் உள்ளது. வேண்டுதலுக்கு பாம்பு புத்திற்கு பால் ஊற்றுவதில் இருந்து தொடங்கி நாக தோஷத்தை தீர்க்க பரிகாரம் செய்வது வரை பாம்பு சார்ந்த வழிபாடு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய துணைக்கண்டம் முழுவதும் விரிந்துகிடக்கிறது. அந்த வகையில், பிகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கியா கட் கிராமத்தில் மிகவும் தனித்துவமான மற்றும் ஆச்சர்யப்பட வைக்கும் பாம்பு திருவிழா நடைபெறுகிறது.
பிகாரின் பாம்பு திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமியில் இங்கு இந்த பாம்பு திருவிழா (அ) நாக திருவிழா நடைபெறும் எனலாம். இந்தாண்டு ஆக. 9ஆம் தேதி நாக பஞ்சமி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். உள்ளூர், உள் மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பல்வேறு பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள். இந்த திருவிழாவின் சிறப்பு, ஒவ்வொரு பக்தரும் தங்களின் கைகளில், கழுத்தில் என உடலில் முழுவதும் பாம்புகளை வைத்திருப்பதை பார்க்க முடியும். இந்த திருவிழா அம்மக்களின பாம்புகள் சார்ந்த நம்பிக்கை மற்றும் வழிபாடு சார்ந்ததாகும்.
மேலும் படிக்க | நாகப்பாம்பை கொத்த சென்ற தேள்! இறுதியில் என்ன ஆனது? வைரலாகும் வீடியோ!
இந்த திருவிழா அங்குள்ள ஒரு ஆற்றில் இருந்து தொடங்குகிறது. உள்ளூர் பூசாரி அந்த ஆற்றில் மூழ்கி அதன் உள்ளிருந்து பாம்புகளை எடுத்து வெளியே வீசுவார். இந்த காட்சியை பார்க்க பிரமிப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்த பாம்புகளை மக்கள் தங்களின் கழுத்துகளில் சுற்றிக்கொள்வார்கள். கையில் எடுத்துக்கொள்வார்கள். அந்த திருவிழா முடியும் வரை ஒவ்வொருவரும் பாம்புகளை கையில் வைத்திருப்பார்கள், எங்கு போனாலும் அதை அன்று முழுவதும் எடுத்துச் செல்வார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாம்பை வழிபடுவது மட்டுமின்றி அதனை அசால்ட்டாக கையாள்வார்கள்.
இந்த பாம்பு திருவிழா சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தற்போதைய காலகட்டத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்று பாம்புகளை வழிபடும் மக்கள் பாம்பு தங்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும், அமைதியையும் கொண்டு வரும் என நம்புகின்றனர். இந்த திருவிழா நோக்கி மக்களை மேலும் ஈர்க்கக் கூடிய விஷயம் ஒன்றுள்ளது. அதாவது, பாம்புகளை வைத்து அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இதனை காணவும், அதில் கலந்துகொள்ளவும் ஏராளமானவர்கள் அந்த திருவிழாவுக்கு வருகை தருவார்கள்.
அந்த வகையில், இந்த பாம்பு திருவிழாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ 11 வாரத்திற்கு முன் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 5.25 கோடி வியூஸ் வந்துள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 18 லட்சம் லைக்குகளும், 7 ஆயிரத்திற்கும் மேலான கமெண்ட்களும் வந்துள்ளன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலேயே அதிக வியூஸை பெற்று வரும் நிலையில், பேஸ்புக் மற்றும் X தளத்திலும் பல்வேறு பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் பிகாரில் நடைபெறும் இந்த பாம்பு திருவிழா குறித்து தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். இந்த வீடியோ யாரால், எப்போது எடுக்கப்பட்டது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ