Shocking Video: தண்டவாளத்தில் செல்போன் அரட்டை; தலைக்கு மேல் கடந்து செல்லும் ரயில்

பலருக்கு மொபைலில் பேசுவதில் பிஸியாகிவிடும் போது, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய எந்த சிந்தனையும் இருப்பதில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2022, 05:48 PM IST
Shocking Video: தண்டவாளத்தில் செல்போன் அரட்டை;  தலைக்கு மேல் கடந்து செல்லும் ரயில் title=

பலருக்கு மொபைலில் பேசுவதில் பிஸியாகிவிடும் போது, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய எந்த சிந்தனையும் இருப்பதில்லை. பல சமயங்களில் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசிக்கொண்டே வழி தவறி விடுகிறார்கள். மேலும் பலர் மொபைலில் சாட் செய்தும், வீடியோ கால் பேசிக்கொண்டும் சாலையில் நடந்து செல்லும் போது,  கவனக்குறைவால் தங்களுக்கு விபத்து நேரிடும் என நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

அடிக்கடி மொபைலில் பேசிக்கொண்டு விபத்துக்குள்ளாகும் போது இது போன்ற சம்பவங்களும் விபத்துக்களும் காணப்படுகின்றன. இப்படி ஒரு அலட்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்து மொபைலில் பேசுவது, ரயில் அவரது தலைக்கு மேல் கடந்து செல்வதையும் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது.  இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தண்டவாளத்தில் படுத்திருந்த பெண் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும் போது, ரயில் அவரது தலைக்கு மேலே கடந்து சென்றது.  இந்த வீடியோவை பார்க்கும் போது, மிகவும் அதிர்ச்சிகரமாகவும், இளைஞர்களை நினைத்து கவலையாகவும் உள்ளது. தண்டவாளத்தில் படுத்திருந்த சிறுமி மொபைலில் பேசிக் கொண்டிருக்க, ரயில் கடந்து செல்வதைப் பார்த்தால், அதிர்ஷ்டத்தினால் அவர் உயிர் தப்பினார் எனலாம்.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவுடன், அவர் ஒரு வேடிக்கையான தலைப்பு கொடுத்துள்ளார்- தொலைபேசியில் கிசுகிசுக்கள் மிகவும் முக்கியம் என அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து மக்கள் பல வகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News