பொதுவாக நாம் பயன்படுத்த கூடிய அடிக்கடி துவைக்க வேண்டும் என்று சொல்லி தான் பார்த்து இருப்போம். ஆனால் துணிகளை அடிக்கடி துவைப்பதால் சுற்றுச்சூழலில் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக ஃபேஷன் துறையில் பயன்படுத்தப்படும் செயற்கை இழைகள் மைக்ரோ பிளாஸ்டிக் கடல்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகள் ஒவ்வொரு வரும் தாங்கள் பயன்படுத்திய துணிகளை எவ்வளவு முறை துவைக்கிறார்கள் என்பதை பொறுத்து மாறும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அதே நேரத்தில் பணத்தை மிச்சப்படுத்தவும் செய்யக்கூடிய சில எளிதாக செயல்கள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சியின் படி, ஆர்க்டிக் உட்பட பெருங்கடல்களில் கணிசமான அளவு மைக்ரோபிளாஸ்டிக்ஸ்கள் அதிகரித்துள்ளன.
மேலும் படிக்க | 400 கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் வீடு! வெளியான வேற லெவல் புகைப்படங்கள்!
இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸில் பெரும்பாலானவை (90% மேல்) செயற்கை இழைகளால் செய்யப்பட்டவை. குறிப்பாக பாலியஸ்டர் (73%) உள்ளது. இவை ஜவுளிதுறையில் பயன்படுத்தப்படும் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் போன்றது. இதற்கான முக்கிய காரணம் துணிகளை அடிக்கடி துவைப்பதால் ஏற்படுகிறது என்று பிரான்ஸை சேர்ந்த சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நைலான், பாலியஸ்டர், எலாஸ்டேன் ஆகியவை துணிகளில் இருந்து வரும் கழிவு பொருட்களை கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் கூட சுத்திகரிக்க முடியாது. கடைசியில் இவை கடலில் கலக்கின்றன. பிளாஸ்டிக் பைகளை விட, கடல் மாசுபாட்டிற்கு இந்த பொருட்கள் முக்கியமான காரணமாக உள்ளது.
கடலோரத்தில் மட்டும் 14 மில்லியன் டன் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த சுற்றுசூழல் பிரச்சனை காரணமாக ஜவுளி துறையில் முன்னணியில் இருக்கும் நாடான பிரான்ஸ் முக்கிய முடிவு எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு 2025க்குள் வாஷிங் மிஷின்களில் மைக்ரோபிளாஸ்டிக் வடிகட்டிகளை நிறுவ வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. துணிகளில் இருந்து வெளியேறும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கடல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பாதிப்பை விளைவிக்கும் முன் மக்களாகிய நாமும் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த செய்தியை படித்தபின், ஒவ்வொரு துணிகளையும் எத்தனை முறை துவைக்கலாம் என்ற கேள்வி எழுந்து இருக்கும்.
குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கடினமாக துணிகளில் அதிக மைக்ரோபிளாஸ்டிக் உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு துணிகளின் பயன்பாட்டை பொறுத்து அதனை துவைப்பது நல்லது. வாஷிங் மெஷின் மூலம் துவைக்கும் முன் நாள் முழுவதும் அணியக்கூடிய உள்ளாடையை தவிர, மற்ற துணிகளை ஒருமுறை அணிந்த பின்பு துவைக்க வேண்டாம். அதே போல ஆடைகளுக்கு மேல் போடப்படும் ஜாக்கெட் அல்லது ஷர்ட் போன்றவற்றை அடிக்கடி துவைக்க வேண்டாம்.
மேலும் படிக்க | வாயை திறந்து வைத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ