பாம்பை கைமா பண்ணத் துடிக்கும் முதலை! உன்னை பிரியாணி போடறேன்! சீறும் பாம்பு

Alligator Python Fight Video: பாம்பென்றால் படையே நடுங்கும் என்று சொல்லி பயப்பட்டாலும், பாம்புகளின் வீடியோக்கள் அதிகம் வைரலாகின்றன.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2023, 02:53 PM IST
  • பயங்கர சண்டையில் ஜெயிக்கப்போவது யாரு?
  • முதலையை விழுங்கத் துடிக்கும் பாம்பு
  • பாம்பை வாயால் கடித்து அழுத்திய முதலை
பாம்பை கைமா பண்ணத் துடிக்கும் முதலை! உன்னை பிரியாணி போடறேன்! சீறும் பாம்பு title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதிலும், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் உள்ள ரசிகர் பட்டாளம், செல்ல பிராணிகளின் வீடியோக்களை கொண்டாடுகின்றன என்றால் அது பொய்யில்லை. மன அழுத்தத்தையும் டென்ஷனையும் போக்கும் சுவாரசியமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து, ரசிக்கின்றனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை என சாதாரணமான வீட்டு விலங்குகளின் வீடியோக்கள் முதல், காட்டு விலங்குகளின் சில்லறை காமெடி வரை, பலதரப்பட்ட விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன. அதிலும், பாம்பென்றால் படையே நடுங்கும் என்று சொல்லி பயப்பட்டாலும், பாம்புகளின் வீடியோக்கள் அதிகம் வைரலாகின்றன.

பாம்புகளின் வீடியோக்கள் பலரையும் கவர்வதற்கான காரணம் என்ன? பயப்படுத்தும் பாம்பே, பயந்து பதுங்கும் காட்சியை இணையம் மூலம் வைரலாகும் வீடியோக்கள் சுவராசியமாக்குகின்றன.. 

மேலும் படிக்க | அணகோண்டா பாம்பிடம் சரமாரியாக கடிவாங்கிய நபர்; வைரல் வீடியோ 

அப்படி ஒரு வீடியோ தான் இது. முதலையும், மலைப்பாம்பும் இருவேறு குணாதிசயங்கள் கொண்டவை. முதலை, மலைப்பாம்பை வேட்டையாடுவது எப்படி இருக்கும்? மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை காட்டும் அதிர்ச்சி கலந்த வீடியோ இது.  

இந்த வீடியோவில் நீருக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில், பாம்பும், நீண்ட முதலையும் சண்டை போட்டுக் கொள்கின்றன. வலிமையான இரண்டுமே, யார் முதலில் தாக்குவது என போட்டிப் போட்டுக் கொண்டு போடும் சண்டை அச்சத்தைக் கொடுத்தாலும், த்ரில்லர் படம் போல தோன்றுகிறது.   

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில  வீடியோக்கள் நம் மனதை மிகவும் கனமாக்கிவிடும். இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஆனால், இது போன்ற வீடியோக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து வைரல் வீடியோக்களில் முதலிடத்தை பிடிக்கின்றன.

மேலும் படிக்க | Viral Video: வாஞ்சையான அந்த ஸ்பரிசம்... சான்ஸே இல்ல... இணையத்தை கலக்கும் வீடியோ!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)

மேலும் படிக்க | சிங்கக்குட்டியை பிளான் போட்டு கடத்திய குரங்குகள்: சினிமாவை மிஞ்சும் சீன், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News