குரங்கு கையில் பூமாலை ஆனது ‘ஒரு லட்சம் ரூபாய்’ பணப்பை..!!!

குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல என்ற பழமொழி அனைவருக்கு தெரிந்திருக்கும். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் இதனை நிச்சயம் நினைவு படுத்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 5, 2021, 10:55 AM IST
குரங்கு கையில் பூமாலை ஆனது ‘ஒரு லட்சம் ரூபாய்’ பணப்பை..!!! title=

ஜபல்பூர்: குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல என்ற பழமொழி அனைவருக்கு தெரிந்திருக்கும். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் இதனை நிச்சயம் நினைவு படுத்தும்.

மத்திய பிரதேசத்தில் கடவ் காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில், போக்குவரத்து நெரிசலில், சிக்கியிருந்த ஒருவருக்கு ஏற்பட்ட நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்கு உரியது தான். ஆட்டோ ரிக்‌ஷாவில் பணத்தை எடுத்துச் சென்றவர் மற்ற இருவருடன் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தபோது இந்த நடந்தது. சாலையில், போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்திருந்த நபரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் அடங்கிய பணப்பையை ஒரு குரங்கு பறித்துச் சென்றது.

மூவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த போது, குரங்கு ஒருவரின் கையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தில் ஏறியது. பணத்தை எடுத்த பிறகு, குரங்கு அதிலிருந்து பணத்தை எடுத்து சுற்றிலும் வீச சாலையில் பண மழை பொழிந்தது. பணத்தின் உரிமையாளர், பதற்றத்துடன், பணத்தை சேகரிக்க தொடங்கினார். ஆனால், ரூ.56,000 மட்டுமே திரும்ப பெற முடிந்தது ஆனால் மீதமுள்ள பணம் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், மீதமுள்ள பணத்தை யார் எடுத்தார்கள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ALSO READ | மதுவை மறக்க இரும்பை சாப்பிட்ட நபர்; X-Ray பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..!!

"வாகனத்தில் இருந்து மூவரும் ​​போக்குவரத்து நெரிசலுக்கு என்ன காரணம் என்று அறிய எட்டி பார்த்த போது, ஒரு குரங்கு பணப்பையை பறித்து சென்றது. பணப் பையுடன் மரத்தில் ஏறிய குரங்கு அதனை பிரித்து பார்த்து, அதில் இருந்த ஒரு லட்சம் பணத்தை, எடுத்து வீசத் தொடங்கியது. உரிமையாளருக்கு ₹56,000 மட்டுமே திரும்ப கிடைத்தது. மற்ற ரூபாய் நோட்டுக்களை யார் எடுத்து சென்றார்கள் எஅன தெரியவில்லை ” என்று மஜோலி காவல் நிலைய பொறுப்பாளர் சச்சின் சிங் விளக்கினார்.

இதற்கிடையில், யாருக்கும் எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால் திருட்டு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் குரங்குகளுக்கு உணவை வழங்குகிறார்கள், அதனால்தான் விலங்குகள் சில நேரங்களில் உணவைத் தேடி வாகனங்களுக்குள் நுழைய முயல்கின்றன என அங்கிருப்பவர் ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News