நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கொன்று வன்புணர்வு செய்த Serial killer

9 வயது சிறுமி முதல் 100 வயது மூதாட்டி வரை கொன்று, சடலங்களை வன்புணர்வு செய்த காமக்கொடூரனின் கொடூரச் செயல்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 5, 2021, 11:10 PM IST
  • பெண்களை மட்டும் குறி வைத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்
  • சமூக ஊடகங்களில் இருக்கும் பெண்களை தேர்ந்தெடுக்கும் குற்றவாளி
  • 9 முதல் 100 வயது வரையிலான பெண்களை கொன்று பலாத்காரம்
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கொன்று வன்புணர்வு செய்த Serial killer title=

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கொன்று குவித்த சீரியல் சைக்கோ கொலையாளி, சடலங்களை வன்புணர்வு செய்துள்ளான். இந்தத் தகவல் வெளியானதும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

தொடர் கொலைகளை செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. தொடர் கொலை மற்றும் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த நபர் இங்கிலாந்தின் சசெக்ஸ் நகரில் வசிப்பவர். 

டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, புல்லர் என்ற நபர், குறைந்தது 100 பெண்களைக் கொன்று அவர்களின் உடல்களை பாலியல் பலாத்காரம் செய்தார். 

மருத்துவமனையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வரும் புல்லருக்கு பெண்களின் வயது ஒரு பொருட்டே கிடையாது என்று காவல்துறையின் வழக்குகள் சொல்கின்றன. 9 வயது சிறுமி முதல் 100 வயது மூதாட்டி வரை இந்த காமக்கொடூரனின் கொடூரச் செயலுக்கு பலியாகியுள்ளனர். இந்த தகவல் ஒன்றே புல்லரின் கொடூரத்தை அளவிட போதுமானதாக இருக்கிறது.

Also Read | 'கல்லறையில்' இருந்து வெளியே வந்த 'விரல்கள்'; நடந்தது என்ன..!!

தான் செய்த கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்களை பதிவு செய்து வைத்திருந்தார். அதாவது, கொன்ற பெண்ணின் சடலத்தில் தான் செய்த வன்கொடுமைச் செயல்களைப் பற்றிய பதிவையும் வைத்திருப்பார். தகவல்களை ஒரு டைரியில் எழுதி பராமரித்து வந்தார். சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் தகவல்களை எடுத்து பயன்படுத்துவதாக புல்லர் தெரிவித்துள்ளார். தற்போது, புல்லர் மீது 51 வழக்குகளில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

போலீஸ் விசாரணையில் ஃபுல்லரின் கணினியில் இருந்து லட்சக்கணக்கான பெண்களின் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் இதுவரை காவல்துறையால் அடையாளம் காணப்படவில்லை.

இங்கிலாந்தின் சசெக்ஸில் வசிக்கும் பலர், சசெக்ஸ் மருத்துவமனை அல்லது டர்ன்பில் வெல்ஸ் மருத்துவமனையில் இறந்த தங்கள் உறவினர்களும் ஃபுல்லருக்கு பலியாகியிருக்கலாம் என்ற அதிர்ச்சியில் உள்ளனர். புல்லரால் தனது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கும் அளவுக்கு விஷயம் விபரீதமாகியுள்ளது.
நீதிமன்றத்தில் புல்லர் மீதான விசாரணையில் வெளிவரும் தகவல்கள் மேலும் எதுபோன்ற அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் என்று மக்கள் திகைத்துப் போயிருக்கின்றனர்.

ALSO READ | கொரோனாவை குணமாக்கும் Molnupiravir மாத்திரைக்கு அங்கீகாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News