Monkey vs Leopard: சினிமாவை மிஞ்சும் ‘சேஸ்’ காட்சிகள், காட்டில் நடக்கும் களேபரத்தின் வைரல் வீடியோ

Monkey vs Leopard: இப்படி ஒரு சண்டை காட்சியை சினிமாவில் கூட பார்க்க முடியாது. குரங்குக்கும் சிறுத்தைக்கும் இடையில் நடக்கும் சேஸ் காட்சியின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 11, 2023, 11:34 AM IST
  • காட்டு விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • சில வீடியோக்கள் நம்மை பெரும் அளவில் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளன.
  • இவற்றில் சிங்கம், புலி, குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகிய விலங்குகளுக்கு இணையத்தில் அதிக மவுசு உள்ளது.
Monkey vs Leopard: சினிமாவை மிஞ்சும் ‘சேஸ்’ காட்சிகள், காட்டில் நடக்கும் களேபரத்தின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காட்டு விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சில வீடியோக்கள் நம்மை பெரும் அளவில் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளன. இவற்றில் சிங்கம், புலி, குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகிய விலங்குகளுக்கு இணையத்தில் அதிக மவுசு உள்ளது. சமீபத்தில் ஒரு வியக்க வைக்கும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் நாம் குரங்குகள் மற்ற விலங்குகளை தொந்தரவு செய்து, கிண்டல் செய்தும் பார்த்துள்ளோம். ஒவ்வொரு முறையும், குரங்குகள் மற்ற விலங்குகளை தொந்தரவு செய்து விட்டு ஓடி விடுகின்றன. ஆனால், அதற்கு மாறான ஒரு விஷயத்தை இந்த வீடியோவில் நாம் காண்கிறோம். ஒரு காட்டில் சிறுத்தை குரங்கின் பின்னால் ஓடி அதை துரத்துவதை காண்கிறோம். குரங்கு தப்பிக்க ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு குதிக்கத் தொடங்குகிறது. ஆனால், அதுவே எதிர்பாராத வண்ணம் சிறுத்தையும் பெரிதாக குதித்து குரங்கை பிடிக்கிறது.

மேலும் படிக்க | நாய் குட்டிக்கு அடித்த ’அதிர்ஷ்டம்’ தண்டவாளத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம்: வைரல் வீடியோ

சிறுத்தையிடம் சிக்கிய குரங்கு

வைரலாகி வரும் வீடியோவை பார்த்தால், சிறுத்தையை சீண்டி குரங்கு பெரிய தவறை செய்ததாகவே தெரிகிறது. சிறுத்தையால் குரங்கின் குறும்பை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது குரங்கின் பின்னால் ஆக்ரோஷமாக செல்லத் தொடங்குகிறது. குரங்கு மரத்தில் ஏறவே சிறுத்தையும் மரத்தின் மீது ஏறுகிறது. சிறுத்தையிடமிருந்து தப்பிக்க, குரங்கு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்கு குதிக்கிறது. ஆனால், குரங்கு எவ்வளவு வேகமாக குதித்ததோ, அதே வேகத்துடன் சிறுத்தையும் குதிக்கிறது. 

இறுதியில், குரங்கு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவுகிறது. ஆனால் சிறுத்தை குரங்கை பிடிக்கும் நோக்கில் இருப்பது போல தோன்றுகிறது. சிறுத்தையும் குரங்கின் பின்னால் குதித்து, தன் கூரான நகங்கள் கொண்ட கைகளால் குரங்கை பிடித்து அதை இழுத்துக்கொண்டு கீழே குதிக்கிறது. அதன் பின் நடந்தது வீடியோவில் தெரியவில்லை என்றாலும், சிறுத்தை குரங்கை வேட்டையாடியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

பதற வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 

இங்கு குரங்கு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையாக முயன்றும் சிறுத்தையின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்த் நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "சிறுத்தைகள் சந்தர்ப்பவாதிகள் மட்டுமல்ல, பலமான வேட்டை விலங்களும் கூட" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | கலி காலம்னு சும்மாவா சொன்னாங்க.. ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்ணும் குரங்கு - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News