கிரிக்கெட் மைதானத்தில் கால்பந்து விளையாடிய ரோகித் ஷர்மா!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் ஷர்மா கிரிக்கெட் பந்தை காலால் தள்ளிய சம்பவம் தற்போது பெரும் பேச்சு பொருளாய் மாறியுள்ளது!

Last Updated : Apr 13, 2019, 08:56 PM IST
கிரிக்கெட் மைதானத்தில் கால்பந்து விளையாடிய ரோகித் ஷர்மா! title=

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் ஷர்மா கிரிக்கெட் பந்தை காலால் தள்ளிய சம்பவம் தற்போது பெரும் பேச்சு பொருளாய் மாறியுள்ளது!

மும்பை வான்கோட்  மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே 27-வது லீக் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியின் போது மும்பை அணி வீரர் ரோகித் ஷர்மா பந்தை தனது காலால் அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2019 தொடரின் 27-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கோட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியின் முதற் பாதியில் 10-வது ஓவரினை கௌதம் வீசினார். இவரது பந்தை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா ஒறுகட்டத்தில் கிறிஸை விட்டு ஏறி ஆடிக்க நினைத்தார், ஆனால் அந்த பந்தை அவர் விட தான் ஸ்டம்ப் அவுட் ஆகிவிடுவோமோ என என்னி தன் காலால் அந்த பந்தை அடித்து தள்ளியுள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது, எனினும் ராஜஸ்தான் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending News