பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட NGK திரைப்பட முதல் சிங்கிள்...

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Apr 12, 2019, 05:11 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட NGK திரைப்பட முதல் சிங்கிள்...  title=

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி  NGK படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு தணிக்கைக் குழு U சான்றிதழ் அளித்தது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் மே மாதம் 31-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News