Viral Video: தடம் புரண்ட ரயில்... உடனே ஓடோடி வந்த மக்கள் - ஆனால் என்ன செஞ்சாங்கனு பாருங்க!

Viral Video Latest: சரக்கு ரயில் தரம்புரண்டதால் அதில் இருந்த டீசல் தரையில் கொட்டிவிட்டது. அந்த டீசலை கிராம மக்கள் பலரும் வண்டி வண்டியாக எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 7, 2024, 11:34 AM IST
  • இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது
  • நெட்டிசன்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
  • X தளத்தில் சுமார் 3 லட்ச வீயூஸை இந்த வீடியோ நெருங்கி வருகிறது
Viral Video: தடம் புரண்ட ரயில்... உடனே ஓடோடி வந்த மக்கள் - ஆனால் என்ன செஞ்சாங்கனு பாருங்க! title=

Viral Video Latest: சமீப ஆண்டுகளாக இந்தியாவில் ரயில்கள் அடிக்கடி தரம்புரண்டு விபத்துக்குள்ளாகும் செய்திகளை கேட்டிருப்பீர்கள். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒடிசா ரயில் விபத்தில் சுமார் 288 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதை தொடர்ந்து பல இடங்களில் ஆங்காங்கே பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் தடம்புரண்டு விபத்தை சந்தித்து வருகின்றன. 

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் 21 ரயில்கள் தடம்புரண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழந்தனர். இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் ரத்லம் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை (அக். 3) இரவு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

டீசலை எடுத்துச் செல்லும் மக்கள்

அந்த சரக்கு ரயிலில் மூன்று பெட்டிகள் நிறைய டீசல் நிரப்பப்பட்டிருந்தது.  ரயில் தடம் புரண்டதில் அதில் இருந்த டீசல் அனைத்தும் தரையில் கொட்டி சிதறின. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் அங்கு ரயில் கவிழந்ததால் பள்ளத்திற்குள்ளும், ஓடைக்குள்ளும் நிரம்பிய டீசலை பிளாஸ்டிக் கேன்களை கொண்டுவந்து மக்கள் அனைவரும் எடுத்துச்செல்வது பதிவாகி உள்ளது.

மேலும் படிக்க | Viral Video: புலியை சங்கிலியால் கட்டி... முதுகில் சவாரி - பாகிஸ்தான் பிரபலம் மீது எழும் கண்டனங்கள்

அந்த டீசல் அங்கிருக்கும் தண்ணீருடன் கலந்திருந்தாலும் மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி அதனை தங்களின் வீட்டுக்கு எடுத்துச்செல்வதையும் அந்த வைரல் வீடியோவில் காண முடிகிறது. குறிப்பாக, பெண்கள், ஆண்கள் என பல பேர் ரயில் கவிழ்ந்து ஓடையில் நீர் கலந்து தேங்கியிருந்த டீசலை பக்கெட்டுகளில், பாட்டில்களில், மண்ணெண்ணெய் கேன்களில் எடுத்துச் செல்கின்றனர். 

வைரலாகும் வீடியோ

அங்கு போலீஸ் அதிகாரிகள், ரயில் அதிகாரிகள் நின்றுகொண்டிருந்தாலும் மக்கள் தயங்காமல் டீசலை எடுத்துச்செல்வதையும் காண முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். X தளத்தில் @gharkekalesh என்ற பதிவர் பதிவிட்ட இந்த வீடியோ 3 லட்ச வியூஸை நெருங்கி வருகிறது. 

மேலும், இதனை பலரும் மக்கள் திருடுகின்றனர் என பதிவிட்டிருந்தனர். ஆனால் இது திருட்டு இல்லை. விபத்தால் தரையில் கொட்டிய டீசலை எடுத்துச்செல்வது திருட்டு ஆகாது என்று பலரும் அவர்களுக்கு பதில் அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த டீசல் தண்ணீர் உடன் கலந்திருப்பதால் இவற்றை அவர்கள் நேரடியாக வாகனங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஆபத்தை உணராமல் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பாதுகாப்பற்றது என்றும் சிலர் விமர்சித்தனர். 

மேலும் படிக்க | வீடு வீடாக உணவு டெலிவரி செய்யும் Zomato CEO மற்றும் அவரது மனைவி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News