விமானத்தில் அழுத குழந்தையை ஆறுதல்படுத்தும் ஊழியர்! இதயங்களை வென்ற வீடியோ!

விமானத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையை விமானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தூக்கி வைத்துக்கொண்டும் சமாதானம் செய்து அழுகையை நிறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 31, 2022, 12:46 PM IST
  • விமானத்தில் அழுத குழந்தை.
  • அழுத குழந்தையை சமாதானபடுத்தும் ஊழியர்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
விமானத்தில் அழுத குழந்தையை ஆறுதல்படுத்தும் ஊழியர்! இதயங்களை வென்ற வீடியோ! title=

ஏர் இந்தியா விமானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.  குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அவை செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது கவனத்தை வெகு விரைவாக ஈர்த்துவிடும்.  அதேசமயம் அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தையை சமாதானம் செய்வது என்பது மிகப்பெரிய டாஸ்க். அந்த டாஸ்க்கை வெற்றிகரமாக செய்து முடித்த விமான ஊழியர் தான் தற்போது பலரின் பாராட்டுக்களையும் பெற்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளார்.  அழுதுகொண்டிருக்கும் குழந்தைகையை அழகாக சமாதானம் செய்து அதன் அழுகையை நிறுத்தியுள்ளார், இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

அந்த விமான ஊழியரின் பெயர் நீல் மால்கம், அவர் குழந்தையை தூக்கி தனது தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் குழந்தையின் முதுகு பக்கத்தில் மெதுவாக தட்டி கொடுத்து கொண்டு விமானத்திற்குள் அங்குமிங்குமாக மெதுவாக நடந்துகொண்டே இருக்கிறார்.  யாரென்றே தெரியாத அவரிடம் குழந்தை ஒட்டிக்கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, அந்த வீடியோவை பார்க்கும்போது குழந்தையும் அவரிடம் நன்கு வசதியாக உணர்வது போன்று தெரிகிறது.  இந்த வீடியோவுடன், @airindia.in ஊழியரின் இனிமையான செயலை நான் மிகவும் பாராட்டுகிறேன், எனது மகள் விமான ஊழியரின் தோள்களில் வசதியாக படுத்திருப்பதை கண்டு நான் ஆச்சர்யமடைகிறேன், அவருக்கு மிக்க நன்றி.  டாடா நிறுவனத்திற்கு வந்ததிலிருந்து இந்த பயணத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeevan Venkat (@jeevan_jwa)

மேலும் எனது வீடியோவில் நான் ஒரு மாமனிதரை கண்டறிந்துள்ளேன், இந்த வீடியோவை வைரலாகி @neil_nitin_ub இவரை அடைய செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றும் குழந்தையின் தந்தை கேப்ஷனில் எழுதியுள்ளார்.  இதுவரை இந்த வீடியோவை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இணையவாசிகள் கண்டு ரசித்துள்ளனர், இந்த வீடியவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் குவிந்திருக்கிறது.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News