தலையில் கேமரா.... வேற லெவல் வைரல் வீடியோ: சிசிடிவி கண்டுபித்தவனையே மிரள வைத்த சம்பவம்

Viral Video: தனது மகள் எங்கே செல்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை 24x7 பார்க்க, ஒரு தந்தை ஒரு வினோதமான முறையை கையாண்டுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 12, 2024, 10:54 AM IST
  • பெண்ணின் தலையில் சிசிடிவி கேமரா.
  • வியக்க வைக்கும் காரணம்.
  • வைரலாகும் வீடியோ.
தலையில் கேமரா.... வேற லெவல் வைரல் வீடியோ: சிசிடிவி கண்டுபித்தவனையே மிரள வைத்த சம்பவம் title=

Viral Video: இந்த காலத்தில் அனைவரும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் திரும்ப வீட்டிற்கு வரும் வரை வீட்டில் இருப்பவர்கள் பதட்டத்தில்தான் உள்ளனர்.

பொதுவாகவே மகள்கள் தந்தைகளின் தேவதைகளாக இருக்கிறார்கள். தனது மகளின் பாதுகாப்பிற்காக ஒரு தந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார். அதற்கு நாம் தினம் தினம் பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் ஒரு தந்தை செய்த ஒரு விஷயம் மகள் மீதான தந்தை பாசத்தை அடுத்த லெவலுக்கே கொண்டு சென்றுள்ளது.  இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

தனது மகள் எங்கே செல்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை 24x7 பார்க்க, ஒரு தந்தை ஒரு வினோதமான முறையை கையாண்டுள்ளார். அவர் தனது மகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இதன் இணைப்பை தனது மொபைல் போனில் கொண்டுள்ள அவர், ஒவ்வொரு நொடியும் தனது மகளை பார்த்தபடி அவரது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்கிறார்.

மேலும் படிக்க | Viral Video: குறுக்கே நின்ற பைக்... சிறுமிக்கு வந்த திடீர் திருட்டு ஐடியா - உறைந்துபோன உரிமையாளர்!

தலையில் சிசிடிவி கேமராவுடன் வலம் வரும் அந்த பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இணையவாசிகள் இந்த வீடியோவை நம்ப முடியாமல் பார்த்து வருகிறார்கள். வீடியோவில் அந்த பெண் தன் தலை மீது உள்ள கேமரா பற்றி பேட்டி அளிக்கிறார். சிசிடிவி கேமராவை தனது தந்தைதான் பொருத்தியதாகவும், தான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை கவனித்து, தனது பாதுகாப்பை உறுதி செய்ய அவர் இப்படி செய்துள்ளதாகவும் பெண் கூறுகிறார். தனது பாதுகாவலராக இருக்கும் தனது தந்தைக்கு இந்த கேமரா உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

தலையில் சிசிடிவி கேமராவுடன் பேட்டி அளித்த பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:

கராச்சியில் மற்றொரு பெண்ணுக்கு நடந்த சம்பவம் பற்றி கூறும் அவர், அப்படி எதுவும் தன்னுடன் நடக்காமல் இருக்க தனது பெற்றோர் இந்த நூதன யோசனையை செய்துள்ளதாக கூறினார். 

இந்த வீடியோ X இல் Dr Gill என்ற ஐடி -இல் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு சுமார் 17,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News