நோட் பண்ணுங்கப்பா.. இப்படித்தான் சின்சியரா வேலை செய்யணும்: இணையத்தை தெறிக்கவிட்ட குரங்கு, வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்கு வேலை செய்யும் வேகத்தையும் விதத்தையும் பார்த்தால் ப்ரமோஷன் வாங்காமல் விடாது போல் இருக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 22, 2023, 11:18 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @BiharTeacherCan என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • 500க்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர்.
நோட் பண்ணுங்கப்பா.. இப்படித்தான் சின்சியரா வேலை செய்யணும்: இணையத்தை தெறிக்கவிட்ட குரங்கு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இணையத்தில் சிங்கம், புலி, குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகிய மிருகங்களுக்கு அதிக மவுசு இருந்தாலும், குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே சொல்லலாம். குரங்குகளின் குறும்பு வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மிக கியூட்டாக இருந்து, இணையவாசிகளின் உள்ளங்களை கொள்ளைகொள்கின்றன. குறிப்பாக மிக வித்தியாசமான, விசித்திரமான பல குரங்கு வீடியோக்களை நாம் இணையத்தில் தினமும் காண்கிறோம். தற்போதும் அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. குரங்குக்கு இவை எல்லாம் கூட தெரியுமா என நமகு வியப்புதான் மேலோங்கும். இந்த வீடியோவில் குரங்கு ஒன்று மனிதர்களை போல அலுவலகத்தில் கோப்புகளை பார்த்து கணினியில் பணிபுரிவதை காண முடிகின்றது. 

மேலும் படிக்க | வயசானாலும் இளமை துள்ளுது! ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடும் வேட்டிக்கார மாமூ வீடியோ வைரல்

சூப்பரா ஆபீசில் வேலை செய்யும் குரங்கு

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் முன் குரங்கு ஒன்று வேலை செய்யும் காட்சியை காண முடிகின்றது. வீடியோவில், குரங்கு மிகுந்த கவனத்துடன் ஃபைலின் பக்கங்களை திருப்பி பார்ப்பதையும் கணினியில் கீபோர்டை தட்டி தட்டி மிக ஆர்வமாக வேலை செய்வதையும் காண முடிகின்றது.

நாற்காலியின் கைப்பிடியில் அமர்ந்திருக்கும் குரங்கு வேலை செய்யும் வேகத்தையும் விதத்தையும் பார்த்தால் ப்ரமோஷன் வாங்காமல் விடாது போல் இருக்கிறது. மிக அனாயாசமாக குரங்கு கீ போர்டில் விளையாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

குரங்கின் மாஸ் செயலை இங்கே காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @BiharTeacherCan என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 500க்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘நோட் பண்ணுங்கப்பா.. இப்படித்தான் சின்சியரா வேலை செய்யணும்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘பாசுக்கு பிடிச்ச பணியாளர் இவர்தான்’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். ‘இந்த குரங்கு வேலை செய்யும் வேகத்தை பார்த்தா.. ப்ரொமோஷன், இன்க்ரிமெண்ட் எல்லாம் இதுக்குதான் போல இருக்கே’ என மற்றொருவர் வேடிக்கையாக கூறியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நடனமாடி கொண்டிருக்கும் போதே உயிரிழந்த இளைஞர்..! கடைசி நிமிட வீடியோ இணையத்தில் வைரல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News