முடியை பிடித்து இழுத்த குரங்கு, குழந்தையின் நிலை? பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ

Monkey Attack Video: குரங்கு ஒன்று சிறு குழந்தையை தாக்கும் வீடியோ இணையவாசிகளை திகிலில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவை இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 11, 2023, 11:31 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @IamSuVidha என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
முடியை பிடித்து இழுத்த குரங்கு, குழந்தையின் நிலை? பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல வீடியோக்களை நாம் பார்க்கிறோம். குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. 

குரங்குகளின் செயல்கள் பல சமயம் வேடிக்கையாக இருந்தாலும், சில நேரம் இவை ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. குரங்குகளுக்கு அஞ்சி சிலர் தவறி கீழே விழுந்த சம்பவங்களும், குரங்குகளே சிலரை காயப்படுத்திய சம்பவங்களும் இங்கு ஏராளம். அந்த வகையில், சமீபதில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவும் பீதியை கிளப்பும் வகையில் உள்ளது.

குரங்கின் மனநிலையை நம்மால் கணிக்க முடியாது. சில சமயம் சாதாரணமாக இருக்கும் அவை அடுத்த கணமே ஆக்ரோஷமாக மாறி விடுவதுண்டு. இந்த வீடியோவிலும் அப்படி ஒரு சம்பவத்தை தான் காண முடிகின்றது. 

சிகப்பு பையை பார்த்து வந்த குரங்கு

இந்த வீடியோவில் சாலையில் பலர் சென்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்போது தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் இருக்கும் ஒரு சிகப்பு பையை பார்த்து அதை எடுக்க குரங்கு ஒன்று அவர்கள் அருகில் வருகிறது. குரங்கு வருவதையும் அதனால் உள்ள ஆபத்தையும் உணர்ந்த அந்த பெண் அதை விரட்டுவதற்காக அதை நோக்கி கத்துகிறார். ஆனால் பெண்ணின் இந்த செயல் குரங்குக்கு கோவத்தை ஏற்படுத்துகின்றது. கோவத்தில் அந்த குரங்கு பெண்ணின் குழந்தையின் தலைமுடியை இழுக்கத் தொடங்குகிறது.

இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் அச்சப்படாமலும், வியந்து போகாமலும் இருக்க முடியவில்லை. குரங்குகள் மனிதர்களை வம்புக்கு இழுக்கும் பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். வழிப்போக்கர்களின் பைகளை இழுப்பது, கண்ணாடியை பிடுங்கிக்கொண்டு ஓடுவது, உணவுப் பொருட்களை பிடுங்கிக் கொள்வது என இப்படி பல காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். சிலருக்கு சொந்த அனுபவமும் இருக்கும். ஆனால், இங்கு குரங்கு ஒரு குழந்தையிடம் தன் குறும்பை காட்டுவதால் நமக்கு அதிக அச்சம் ஏற்படுகுகின்றது. 

மேலும் படிக்க | படம் பிடிக்க வந்த யூடியூபரின் கேமராவை திருடிய ஆக்டோபஸ்: வைரல் வீடியோ

குழந்தை மீது கோத்தை காட்டிய குரங்கு

வீடியோவில், சில பெண்கள் தங்கள் குழந்தைகளை சாலையில் தள்ளுவண்டியில் அழைத்துச் செல்வதையும், சில குரங்குகள் தூரத்தில் அமர்ந்திருப்பதையும் காண முடிகின்றது. ஒரு தள்ளுவண்டியின் பின்புறத்தில் சிவப்பு நிறப் பை ஒன்று வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, குரங்கு ஒன்று அதில் சாப்பிட ஏதாவது வைத்திருக்கலாம் என்று நினைத்து அதன் அருகே செல்கிறது. அங்கு சென்று குரங்கு அந்த பையை எடுக்க முயற்சிக்கின்றது. இதற்கிடையில், தள்ளுவண்டியை பிடித்திருக்கும் பெண் குரங்கை விரட்ட முயற்சிக்கிறார். அதன் பிறகு நடப்பது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. 

மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவில் அந்த பெண் குரங்கை கண்டித்தவுடன் குரங்கு கோபமடைந்து தள்ளுவண்டியில் அமர்ந்திருந்த சிறுமியின் முடியை இழுக்க ஆரம்பித்ததை வீடியோவில் பார்த்திருப்பீர்கள். அந்த பெண் உடனடியாக குழந்தையின் தள்ளுவண்டியை குரங்கிடம் இருந்து விலக்கிக்கொள்கிறார். வீடியோவில், சிறுமி வலி மற்றும் பயத்தில் சத்தமாக அழுவதைக் காண முடிகின்றது. வீடியோவை பார்த்தால் நம் இதயம் பதபதைக்கின்றது. குரங்கின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @IamSuVidha என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு ஸ்கெட்ச் போட்ட முதலை - கடைசி நேரத்தில் டிவிஸ்ட்; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News