மேக்-அப் கலைத்த மணமகள், மயங்கி விழுந்த மணமகன்: வைரல் வீடியோ

Funny Viral Video: இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.  மக்கள் இதற்கு பல்வேறு விதமான ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 29, 2022, 04:26 PM IST
  • ஜாலியாக இருக்க தனி அறைக்கு வந்த மணமகன்.
  • மேக் அப்பை அகற்றி ஷாக் கொடுத்த மணமகள்.
  • வைரலான வீடியோ.
மேக்-அப் கலைத்த மணமகள், மயங்கி விழுந்த மணமகன்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. திருமண வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இணையத்தில் நாம் காணும் சில வீடியோக்கள் நம்மை சில சமயம் உலுக்கி விடுவதுண்டு. திருமணத்தில் செய்யப்பட்ட ஒரு மோசடி தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோவின் துவக்கத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மணமகனும், மணமகளும் மிக மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகின்றது. தங்கள் அறைக்கு வந்தவுடன் தங்களுக்கு கிடைத்த தனிமையில் ஜாலியாக இருக்க விரும்புகிறார்கள். அப்போதுதான் மணமகனுக்கு ஒரு ஷாக் காத்திருக்கிறது.  

மேலும் படிக்க | ‘பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்’: கட்டித் தழுவி காதல் செய்யும் பாம்புகள், வைரல் வீடியோ 

மயங்கி விழுந்த மாப்பிள்ளை

இந்த வீடியோ வெளியானவுடன் வைரலாகி வருகிறது. வீடியோவின் தொடக்கத்தில், விருந்தினர்கள் அனைவரும் மணமக்களை ஒரு அறையில் தனியாக விட்டுவிட்டு செல்வதை தெரிந்துகொள்ள முடிகின்றது. மணமகன் படுக்கையில் வசதியாக அமர்ந்திருக்க, மணமகள் மேக்கப்பை கழற்றத் தொடங்கினார். மணமகள் மேக்கப்பை அகற்ற அகற்ற, அவரது தோற்றம் மாறுகிறது. அவர் மேக்கப்பை முழுவதுமாக அகற்றிவிட்டு மாப்பிள்ளை முன் வந்தபோது, ​​அதைப் பார்த்து மாப்பிள்ளை மயங்கி விழுந்தார். மேக் அப்பை அகற்றியவுடன் தான் மணமகளுக்கு முடியே இல்லை என்பதும் அவரது பற்களும் சரி இல்லை என்பது மாப்பிள்ளைக்கு தெரிய வருகிறது. இந்த அதிர்ச்சியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மாப்பிள்ளை மயங்கி விழுந்த வீடியோவை இங்கே காணலாம்:

 

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்துகொண்ட மணமகனின் மகிழ்ச்சி இரண்டே நொடிகளில் மறைந்து போவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ, weddingcouplepage என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.  மக்கள் இதற்கு பல்வேறு விதமான ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News