அடேய் என்ன விடுங்கடா... பாசத்தில் நாய்க்குட்டிகள் செய்யும் அட்டகாசங்கள்!

குழந்தை கீழே விழுந்ததும் நாய்க்குட்டிகள் பதறி போய் அந்த குழந்தையை தூக்கிவிட முயன்று பாசத்தை பொழியும் காட்சியில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 25, 2022, 01:40 PM IST
  • குழந்தையை கொஞ்சும் நாய்க்குட்டிகள்.
  • கீழே விழுந்த குழந்தையை தூக்கிவிட்டு நாய்கள்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
அடேய் என்ன விடுங்கடா... பாசத்தில் நாய்க்குட்டிகள் செய்யும் அட்டகாசங்கள்!  title=

நாய் என்றாலே பொதுவாக அனைவரும் சொல்லுவது நன்றியுள்ள ஜீவன் என்று தான், அதை தாண்டியும் நாய் இனங்கள் மிகவும் பாசமானவை. பொதுவாக வளர்ப்பு பிராணிகள் நாம் அவற்றுடன் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து நம்மிடம் பாசமாக இருக்கும், மனிதர்களை விட விலங்கினங்கள் உண்மையான பாசத்தை நம் மீது காட்டும். பல விலங்குகளும் அதன் உரிமையாளருக்கோ அல்லது வீட்டிலுள்ள நபர்களுக்கோ பலவிதமான உதவிகளை செய்வதை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம், அதிலும் குறிப்பாக குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு பாதுகாவலராகவும், சிறந்த நண்பனாகவும் இருப்பது நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் தான். நாய்களுடன் குழந்தைகள் கொஞ்சி விளையாடும் பல காட்சிகளை பார்த்து ரசித்த நாம் இப்போது அதுபோன்ற ஒரு காட்சியை தான் பார்த்து ரசிக்க போகிறோம்.

மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல் 

இந்த காட்சி பார்ப்பவர்களின் மனதை வருடும் விதமாக அமைந்திருக்கிறது, அந்த அழகான காட்சி ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வைரல் வீடியோவில் ஒரு குட்டி குழந்தை மெதுவாக நடந்து செல்கிறது, அதற்கு பாடிகார்டு போல பின்னாடியே மூன்று நாய்குட்டிகளும் குடுகுடுவென ஓடி செல்கிறது. சிறிது தூரம் சென்றதும் அந்த குழந்தை தடுமாறி கீழே விழுந்துவிடுகிறது, உடனே அந்த நாய்க்குட்டிகள் குழந்தையை சூழ்ந்துகொள்ள தாய் நாயும் மற்றொரு குட்டியும் ஓடிவந்து குழந்தையை எழுப்ப முயல்கிறது. பின்னர் அந்த குழந்தையை எழுந்ததும் நாய்க்குட்டிகள் குழந்தையை கொஞ்சி விளையாட ஆரம்பித்து விடுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

நாய்க்குட்டிகள் செயல் இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது, ரிப்பீட் மோடில் பார்க்கும் அளவிற்கு இந்த வீடியோ பலரையும் கவர்ந்திருக்கிறது. இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ‘ப்பா..என்னா டிராபிக்கு’: சாலையை கடக்க தவிக்கும் பாம்பு, சிரிக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News