மணமேடையில் லிப் லாக் கொடுத்த மணப்பெண்! வேதனையில் 90's கிட்ஸ்!

மணமேடையில் மணமகனுக்கு மணப்பெண் லிப்லாக் கொடுத்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியதுடன் சிங்கிள்ஸ்களையும் சற்று அதிகமாகவே கடுப்பேற்றி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 23, 2022, 10:25 AM IST
  • திருமணத்தில் மணமகனுக்கு முத்தம் கொடுத்த மணப்பெண்.
  • அதிர்ச்சி மற்றும் வேதனையில் 90's கிட்ஸ்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
மணமேடையில் லிப் லாக் கொடுத்த மணப்பெண்! வேதனையில் 90's கிட்ஸ்! title=

திருமணம் என்பது மனிதராக பிறந்த ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கியமான தருணம், திருமண வாழ்க்கை சிலருக்கு இனிப்பாக அமைவதும், சிலரும் கசப்பாக அமைவதும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துணையை பொறுத்தது.  பலருக்கும் தங்களது திருமணம் எப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்பது பற்றிய சில கனவுகள் இருக்கும், சிலருக்கு அது கைகூடும் சிலருக்கு அது வெறும் கனவாக மட்டுமே போய்விடும்.  பல கனவுகளும், ஆசைகளும் சுமந்து அடியெடுத்து வைக்கும் இந்த திருமண நாளில் நடைபெறும் சில வினோதமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகிறது.  அப்படி ஒரு சுவாரஸ்யமான அதேசமயம் சிங்கிள்ஸ்களை அடிவயிற்றில் தீயை பற்ற வைத்தது போன்று ஒரு சம்பவம் ஒரு திருமணத்தில் நடந்தேறியுள்ளது, அந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியும் வருகிறது.

மேலும் படிக்க | குடிபோதையில் ஆசாமி தனது பைக்கில் செய்ய செயல்: வீடியோ வைரல்

முன்னரெல்லாம் கணவன் பெயரை சொல்லவே மனைவிமார்கள் தயங்கினார்கள், பொதுவெளியில் தங்கள் துணையுடன் நெருக்கம் கட்டுவதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.  ஆனால் இன்றைய நவநாகரீக உலகில் எல்லாமே சாதாரணமாக மாறிவிட்டது, திருமணத்தில் மணப்பெண் நடனமாடுவது போன்று பல சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது மணமேடையில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டிக்கொண்டு இருக்கும் சமயத்தில், அனைவரும் எதிர்பாராத வகையில் இவ்வளவு ஏன் மணமகன் எதிர்பார்த்திடாத வகையில் மணமகனுக்கு மணமகள் லிப்லாக் செய்கிறார், இதனால் மணமகன் முகத்தில் ஒருவித அதிர்ச்சி கலந்த சந்தோஷம் தாண்டவமாடுகிறது.

 

இந்த சம்பவம் சிலருக்கு ரசிக்கும்படியாக இருந்தாலும் பெரும்பாலான சிங்கிள்ஸ் குறிப்பாக திருமணமாகாத 90ஸ் ஹிட்ஸ்களுக்கு இது மனவேதனையையும் வெறுப்பையும் அளித்திருக்கிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை.  இந்த வயிற்றெரிச்சலை கிளப்பும் வீடியோ இன்ஸ்டாகிராமில் wiitty_ wedding என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது, இதற்கு லைக்குகளும், கமெண்டுகளும் எக்கச்சக்கமாக பறந்து வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: என்னடா இது வீரனுக்கு வந்த சோதனை... சிங்கத்தை பந்தாடும் எருமைகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News