அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! கூச்சத்தில் உறவினர்கள்: வீடியோ வைரல்

Kissing Viral Video: மணமக்களின் இந்த வீடியோவுக்கு மக்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2022, 03:06 PM IST
  • திருமணம் தொடர்பான ஒரு வித்தொயாசமான வீடியோ வெளியாகியுள்ளது.
  • இந்த வீடியோ மணமக்கள் பற்றிய வீடியோ ஆகும்.
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! கூச்சத்தில் உறவினர்கள்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு திருமணமான தம்பதிகளின் சில்மிஷ காதல் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதேபோல் திருமணத்தில் பலவித வினோதமான சடங்குகள் நடைபெறும். அந்த வகையில் இங்கும் அதுபோன்ற ஒரு சடங்கு நடந்துள்ளது. அந்த சடங்கு வீடியோ தற்போது இணயத்தை கலக்கி வருகிறது.

மணமக்களை முத்தமிடச் சொன்னது தப்பா போச்சு
இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது. சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவை பார்க்கும்போது, இந்த மணமக்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது போல் தோன்றுகிறது. கடைசியாக நடந்த சடங்கில் இப்போது மணமகனும், மணமகளும் நெருக்கமாக அமர்ந்துள்ளனர். , இருவரும் ஒருவரையொருவர் முத்தமிடுமாறு புரோகிதர் கூறுகிறார். இதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் இந்த வீடியோவின் முக்கிய ஹைலைட் ஆகும்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

உண்மையில், இருவரும் ஒருவரையொருவர் முத்தமிடச் சொன்னவுடன், மணமகன் உடனடியாக வேகமாக மணமக்களை இழுத்து பிடித்து முத்தமிடத் தொடங்கினார். அங்கிருந்த உறவினர்கள் மணமகனின் இந்த செயலை பார்த்து தங்களின் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்கத் தொடங்கினர். அதுமட்டுமில்லாமல் இந்த ஜோடிகள் வெகுநேரம் வரை முத்தமிட்டுக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் இந்த காட்சியை அங்கிருந்த சிலர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளனர், மேலும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மணமகன், மணமகளின் வெறித்தனமான முத்தமிடும் வீடியோ காட்சியை இங்கே காணலாம்: 

 

சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதன்படி இந்த வீடியோ official_viralclips என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். அதேபோல் இந்த வீடியோ மிகவும் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News