பக்காவா டான்ஸ் ஆடி நடுரோட்டில் மாஸ் காட்டும் தாத்தா: வைரலான வீடியோ

Funny Dance Video: வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், நடுரோட்டில் ஒரு முதியவர் மாஸாக நடனமாடுவதை காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2022, 01:27 PM IST
  • முதியவரின் மாஸான நடனம்.
  • நடுரோட்டில் கூடிய கும்பல்.
  • வைரலான டான்ஸ் வீடியோ.
பக்காவா டான்ஸ் ஆடி நடுரோட்டில் மாஸ் காட்டும் தாத்தா: வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

நடனத்தின் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பல நடனங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் ஒரு மாறுதலுக்கு வயதான நபர்கள் அசால்டாக நடனமாடும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பட்டையைக் கிளப்புகின்றன. 

தற்போது இதுபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் ஒரு முதியவர் போக்குவரத்து காவலருடன் படு மாஸாக நடனமாடியுள்ளார். அவர்கள் நடனமாடுவதை பார்த்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் திரண்டனர். இந்த சம்பவம் இந்தூரில் நடந்தது. இந்த முதியவரும் போக்குவரத்து காவலரும் நடனமாடுவதை பலர் மொபைல் போன்களில் வீடியோ எடுப்பதையும் இந்த வீடியோவில் காண முடிகின்றது.

மேலும் படிக்க | போர்க்களமாக மாறிய திருச்சி தலைமை நீதிமன்றம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

இந்த முதியவர் போக்குவரத்து காவலர் குன்வர் ரஞ்சித் சிங்குடன் நடனமாடினார். குன்வர் ரஞ்சித் நடன பாணியில் போக்குவரத்தை கையாள்வதில் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. 

போக்குவரத்து காவலுரடன் பக்காவா நடனமாடும் முதியவர் 

வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், நடுரோட்டில் ஒரு முதியவர் மாஸாக நடனமாடுவதையும், மெல்ல போக்குவரத்து காவலர் குன்வர் ரஞ்சித் சிங்குக்கு அருகில் செல்வதையும் காண முடிகின்றது. அப்போது ஒரு பாடல் ஒலிக்கவே, முதியவரின் உள்ளே இருக்கும் டான்சர் விழித்துக்கொள்கிறார். 

நடுரோட்டில் முதியவர் பிரேக் டான்ஸ் ஆடத் தொடங்குகிறார். அவர் நடனமாடுவதைப் பார்த்து, குன்வர் ரஞ்சித் சிங்காலும் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஆடும் அட்டகாச நடனத்தை பார்க்க சாலையில் ஏராளமானோர் கூடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

முதியவர் நடுரோடில் ஆடிய மாஸ் நடனத்தை இங்கே காணலாம்:

வீடியோவை வெளியிட்டார் ஐபிஎஸ் அதிகாரி 

முதியவர் மற்றும் குன்வர் ரஞ்சித் சிங்கின் இந்த நடன வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தலைப்பில், "இது போன்ற தருணங்கள் பொது மக்கள் மற்றும் காவல்துறை நட்புக்கு #PublicPoliceFriendship அழகான எடுத்துக்காட்டுகள்! #DancingCop #DancingWithCop." என்று எழுதியுள்ளார். 

இந்த வீடியோ இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. 30 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் தெரு நாய்க்கு சோறூட்டிய பெண்ணின் வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News