Video: விஸ்வாசம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் தல அஜித்!

அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படதின் trailer-னை சத்தமில்லாமல் வெளியிட்டனர் படக்குழுவினர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2018, 01:58 PM IST
Video: விஸ்வாசம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் தல அஜித்! title=

அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படதின் trailer-னை சத்தமில்லாமல் வெளியிட்டனர் படக்குழுவினர்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிக்க, டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்'. இத்திரைப்படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் விநியோகம் அனைத்து ஏரியாக்களிலும் முடிவடைந்துள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ரஷ்யாவில் வெளியாவது இதுவே முதன்முறை.

இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ள நிலையில், ஏற்கனவே பொங்கள் வெளியீடாக ரஜினியின் பேட்ட திரைப்படமும் வெளியாகும் என பேட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மிகப்பெரிய இரண்டு நட்சத்திரங்களின் படங்கள் ஒரேசமையம் வெளிவர உள்ளதால், திரையரங்கு மற்றும் விநியோக உரிமை போன்றவற்றில் பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இருப்பினும் படக்குழுவினர் இரு படங்களின் விநியோக உரிமைகளை விற்று திறம்பட செயல்பட்டுள்ளனர். ரஜினியின் பேட்ட திரைப்படம் ஜனவரி 10-ஆம் நாள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அஜித்தின் விஸ்வாசம் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News