இந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது!

இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டூப்பர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 13, 2019, 07:23 PM IST
இந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது! title=

இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டூப்பர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இந்துஜா. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட் இயக்குனர்களின் கவனத்துக்கு வந்த இவர், அதன்பிறகு மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங் போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் பிகில் படத்தில் தமிழக பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்து வருகிறார். முன்னணி நாயகனுடன் திரையை பகிர்ந்துக்கொண்ட பொருமைக்கிடையில் தற்போது சூப்பர் டூப்பர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்துஜா நடிப்பில் உறுவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தில் துருவ் நாயகனாக நடிக்க, இந்துஜா அதிரடி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஷாஹா ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் AK எழுதி, இயக்குகிறார். படத்தின் பாடல்களையும் எழுதியுள்ளார். ஷாலினி வாசன் தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News