New Fashion Bikini: பிகினியும், முகக்கவசமும்… இது நவீன பாணி உடையலங்காரம்!

கொரோனா காலம் இது என்பதால் பொது இடங்களில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் கட்டாயமாகிவிட்டது. ஆனால் இந்த விதியை மட்டும் கடைபிடித்துவிட்டு, மற்ற எல்லா விதிகளையும் காற்றில் பறக்கவிட்டால் என்னவாகும்? அந்த வீடியோ காட்டுத் தீயாய் வைரலாகும். அப்படி ஒரு வீடியோ தான் இது… 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 5, 2021, 05:10 PM IST
  • விமானநிலையத்தில் வித்தியாசமான கெட்டப்
  • முகக்கவசம் அணிந்த வீடியோ வைரல்
  • நீச்சல்குளத்தில் இருந்து விமானநிலையம் வரை...
New Fashion Bikini: பிகினியும், முகக்கவசமும்… இது நவீன பாணி உடையலங்காரம்! title=

கொரோனா காலம் இது என்பதால் பொது இடங்களில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் கட்டாயமாகிவிட்டது. ஆனால் இந்த விதியை மட்டும் கடைபிடித்துவிட்டு, மற்ற எல்லா விதிகளையும் காற்றில் பறக்கவிட்டால் என்னவாகும்? அந்த வீடியோ காட்டுத் தீயாய் வைரலாகும். அப்படி ஒரு வீடியோ தான் இது… 

அமெரிக்க விமான நிலையத்திற்குள் வித்தியாசமான கெட்டப்பில் செல்லும் பெண்ணின் வீடியோ வைரலாகிறது

கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு பெண் முகக்கவசம் அணிந்து அமெரிக்க விமான நிலையத்திற்குள் செல்வது வைரலாகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? காரணம் அந்தப் பெண் முகக்கவசத்தை சரியாக அணிந்திருக்கிறார். ஆனால், ஆடை பொது இடத்தில் அணிவது போலல்லாமல், நீச்சல் குளத்தில் பயன்படுத்தும் டூ பீஸ் பிகினி ஆடையை போட்டிருக்கிரார்.

அமெரிக்காவில் மியாமி நகரில் விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் இந்த பெண்ணின் வீடியோ அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

யார் என்று அடையாளம் காணப்படாத அந்த அழகிய பெண், விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகளுக்காக நடந்து செல்லும் காட்சி விமான நிலையத்தில் இருந்தவர்களுக்கே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. 

Also Read | பிகினி உடையில் ஊஞ்சல் ஆடும் பிரபல கவர்ச்சி நடிகை; புகைப்படம் வைரல்

தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், அந்த பெண் ஆலிவ்-பச்சை பிகினி மற்றும் முகக்கவசம் அணிந்திருப்பதைக் காணலாம்.

இந்த வைரல் வீடியோவைப் பார்த்து, பலரும் கிண்டலும் கேலியும் செய்கின்றனர். பலரோ நையாண்டியும், நக்கலுமாய் பதிவிட்டுள்ளனர். அந்த இளம் பெண் மதிய நேரத்தில் நீச்சல் குளத்தில் இருந்திருப்பார், திடீரென ஒரு விமானத்தை பிடிக்க அப்படியே எழுந்து ஓடி வந்துவிட்டார் என்கின்றனர்.  

வேறு சிலரோ, பொதுஇடத்தில் ஆடை அணியும் கலாசாரத்தைப் பற்றி கவலைப்படாவிட்டாலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்கும் வகையில்  முகக்கவசம் அணிந்திருப்பதை பாராட்ட வேண்டும் என்று நக்கலடிக்கின்றனர். இந்த வீடியோ பதிவிட்டதில் இருந்து இணையத்தில் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டு, வைரலாகிறது.

READ ALSO | திருமணத்தில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு புதுமணத் தம்பதிகள் பில் அனுப்பிய வினோதம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News